இருங்க நான் போட்டு விடுறேன்.. நெருங்கி வந்த பாரதி.. சிலிர்த்துப் போன கண்ணம்மா!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிப்பவர் ரொம்ப அழகா இருக்கார். அவரின் நடிப்பு நடிகர் விக்ரமை நினைவு படுத்துது.
கண்ணம்மாவை ஒரு வழியாக காரில் முன் சீட்டில் உட்கார வச்சு வீட்டுல இறக்கி விட்டுடறேன்னு சொல்றான். கண்ணம்மாவும் லேசில் இதுக்கு சம்மதிக்கலைன்னாலும், உங்க வீட்டுல போய் என் காரை நீங்க ஸ்க்ராட்ச் பண்ணிட்டதை சொல்லிடுவேன்னு மிரட்டறான்.
உடனே காரில் பின் சீட்டில் ஏறப்போக, ஏங்க நான் இந்த காருக்கு ஓனருங்க...டிரைவர் இல்லைன்னு சொல்றான். நீங்க எதுவா வேணா இருந்துட்டு போங்க.. அதுக்காக எனக்கு கார் ஓட்ட தெரியாதுங்க.. நீங்கதான் ஓட்டணும்னு சொல்றான்.

முன் சீட்டில் உட்காருங்க
அது தெரியுது.. நீங்க முன் சீட்டுல வந்து உட்காருங்கன்னு சொல்றான். அவளும் உட்கார்ந்து கதவை மூடாமல் இருக்க, பார்றான்னு சொல்லிட்டு இவன் கதவை மூடுகிறான். காரில் உட்கார்ந்து சீட் பெல்ட்டை போடுங்கன்னு சொல்றான். தப்பா நினைச்சுக்காதீங்க.. கார் பார்த்திருக்கேன்... ஆனா, காரில் முன் சீட்டில் உட்கார்ந்து போனதில்லை. அதனால எனக்கு சீட் பெல்டெல்லாம் தெரியாதுங்கன்னு சொல்றா.

நான் போட்டு விடறேன்
சரி, இருங்க நான் போட்டு விடறேன்னு சொல்லி, அவளருகில் நெருங்கி சீட் பெல்ட்டை எடுத்து போட்டுவிடறான். இருவரும் கொஞ்ச நேரம் அந்த சிலிர்ப்பில் இருக்காங்க. ஏங்க.. உங்க சித்தி உங்களை ரொம்ப கொடுமை படுத்தறாங்கன்னு கேட்கறேன்.உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்க, கோயிலில் பூசாரி சொன்னப்போ நானும் அங்கதான் இருந்தேன்னு சொல்றான்.

சித்தி திட்டுவதை
எப்படி உங்க சித்தி திட்டறதை நீங்க தாங்கிக்கறீங்கன்னு கேட்கறான். திட்டும்போது குறுகுறுன்னு அஞ்சு நிமிஷம் அவங்க முகத்தையே பார்த்தோம்னு வைங்க.. சீ போன்னு விட்டுட்டு போயிருவாங்க. அதையும் மீறி திட்டினாங்கன்னா, நமக்கு பிடிச்ச பாட்டை மனசுக்குள்ள சத்தமா பாடிகிட்டா, எதுவும் நம்ம காதுக்கு கேட்காதுன்னு சொல்லி சிரிக்கறா. இவனும் சிரிக்கறான்.

உங்கப்பா
என்னங்க பொண்ணை வேலைக்காரியா பார்க்கற உங்க அப்பா எல்லாம் ஒரு அப்பாவா? நான் நல்லா கேள்வி கேட்க போறேன் உங்க அப்பாவைப் பார்த்து.. கொஞ்சமாவது பொண்ணு கஷ்டபடுதேன்னு நினைக்காம வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றதை பார்த்துகிட்டு இருந்தா அவர் என்ன மனுஷன்னு சொல்றான்.

இறங்கணும்
இந்த வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க.. நான் இறங்கிக்கறேன்னு அவ சொல்ல, இல்லைங்க இனிமே உங்க அப்பாவை நான் திட்டலைன்னு சொல்றான். எங்க அப்பாவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு அவ கோச்சுக்கறா.

பாரதியுடன் கண்ணம்மா
பாரதியுடன் கண்ணம்மா காரில் வந்து இறங்கறதை பார்த்த அஞ்சலிக்கு, அவளது அம்மாவுக்கும் ஒரே ஷாக். இவங்க அப்பா எங்க? இப்படியா பொண்ணு வேலைக்காரியா கஷ்டப்படறதை பார்த்துகிட்டு இருப்பாங்கன்னு கேட்க, அஞ்சலியும், சித்தியும் கண்ணம்மாவை முறைக்கறாங்க. எத்தனை தடவை கேட்டாலும் அவங்க அப்பா யாருன்னு சொல்ல மாட்டேங்கறாங்கன்னு பாரதி சொல்ல இருவரும் அமைதியாகறாங்க

கப்பில் பாரதி
காபி போட்டு கொண்டுவா கண்ணம்மான்னு சித்தி சொல்ல, நம்ம அஞ்சலிதான் அகிலனை விட்டுட்டு பாரதியை லவ் பண்றாளே... அதனால, அம்மா நான் காபி போட்டு கொண்டு வரேன்னு சொல்லிட்டு போறா. உள்ளே போய் ஒரு கருப்பு நிற கப்பை எடுத்து, காபியை ஜக்கில் ஊற்றி எடுத்துட்டு வர்றா. காபி கப்பை பாரதியின் கையில் கொடுத்துட்டு காபியை அதில் ஊற்ற, காபி கப்பில் சூடு பரவியதும், பாரதியின் முகம் தெரியுது.

அதிர்ச்சி
இதை பார்த்து பாரதி அதிர்ச்சியாகறான். தனது முகம் தெரியாதபடி கையை வைத்து கப்பை மூடிக்கொண்டு காபி குடிக்கறான். வியர்த்து கொட்டுது. காபி கப்பையும் தர மறுக்கிறான். தம்பி பொண்டாட்டி கையால காபி குடிச்சது சந்தோஷம்னு சொல்லியபடி அத்தை கையில் கப்பை கொடுப்பது போல கொடுத்து நழுவ விடறான், கப் உடைந்தது.

பின்னால் அஞ்சலி
பாரதி சொல்லிட்டு கிளம்பு, பின்னால் ஒடி வந்த அஞ்சலி, கப்பைத்தான் உடைச்சுட்டீங்க பாரதி. என் நெஞ்சில உங்களை பச்சை குத்தி வச்சிருக்கேன் எப்படி அழிப்பீங்க.. நான் உங்க காலை சுத்தும் பூனை குட்டி.என் அழகுல மயங்காம இருக்கறது எனக்கு உங்களை இன்னும் பிடிச்சிருக்குன்னு சொல்றா.

சொன்னேன்
இதை எல்லாம் எங்க அம்மாகிட்ட சொன்னேன்.. உடனே கல்யாணத்தை நிறுத்திருவாங்க..அப்புறம் இந்த சுகமான வாழ்க்கை, கற்பனை கனவு எல்லாம் நொடியிலே சிதைஞ்சு போயிரும்னு சொல்றான். அஞ்சலி சிரிக்கறா...
அஞ்சலி தான் பாரதியை காதலிக்கும் விஷயம் எப்படியாவது தனது வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் தெரிஞ்சுடணும்னு துடிக்கறா.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications