கண்ணம்மா சொன்ன கடைசி வார்த்தை.. குழந்தைகள் எடுத்த முடிவால் நிர்க்கதியாக மாறிய பாரதி
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது கண்ணம்மா என இறுதியாக கூறி இருக்கிறார்.
கண்ணம்மாவின் முடிவை கேட்ட குழந்தைகளும் பாரதிக்கு எதிராக பேசியதை கேட்டு கடைசியில் பாரதி தனி மரமாக மாறி இருக்கிறார்.

கண்ணம்மாவின் இறுதி முடிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று எபிசோட்டில் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ கூப்பிட கண்ணம்மா எல்லா தப்பையும் பண்ணிக்கிட்டு, மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையில் எல்லாம் சரியாகிவிடுமா? ஒரு பேப்பரை நம்புற நீங்க என்னை நம்பல, அன்னைக்கு நீங்க பொறந்ததும் உங்க அம்மா இவர்தான் உங்க அப்பானு சொல்லும்போது, நம்பினீங்க ஆனால் ஆனால் லட்சுமியும் ஹேமாவும் உங்களுக்கு பிறந்த குழந்தைகள் என்று சொன்னதை ஏன் நம்பல? என கேள்வி கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

பாரதிக்கு கொடுத்த பதிலடி
நான் உலகமே தெரியாமல் புருஷன் மட்டும்தான் உலகம் என்று நம்பி உங்களை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் என்னை நீங்கள் தூக்கி எறிந்து இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ள வைச்சிருக்கிங்க நீங்க மட்டும் அன்னைக்கு அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நான் இந்த வீட்டுக்குள்ளே சமையலறையிலும் பெட்ரூமிலும் உங்கள் மனைவியாக இருந்திருப்பேன். அதோடு என்னுடைய வாழ்க்கை முடிந்திருக்கும் என்று நீங்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பியதால் வெளியே சிங்கம், புலி, கரடி என அனைத்து உருவத்திலும் உள்ள மனிதர்களை பார்த்து எந்த வாழ்க்கையை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன். உங்கள் துணை இல்லாமல் பத்து வருடம் என்னால் வாழ்ந்தது இனியும் வாழ முடியும் அதனால் இனி நான் உங்களோடு வாழ விரும்பவில்லை என்று கூறுகிறார்.

குழந்தைகளின் எதிர்பாராத முடிவு
அதே நேரத்தில் சௌந்தர்யா குழந்தைகள் பாரதியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தானே நினைக்கும் கண்ணம்மா குழந்தைகளுக்காக உனது முடிவை மாற்றிக் கொள் என்று சொல்ல குழந்தைகளோடு சேர்ந்து வாழனும் என பாரதி சொன்னால் நான் குழந்தைகளை கூட்டிட்டு போறேன்னு சொல்லல அவங்க யாரோட இருக்க ஆசைப்படுறாங்களோ அவங்களுடைய இருக்கட்டும் என சொல்க, ஹேமா நீங்க எப்படி எங்க அம்மாவை சந்தேகப்பட்டீங்க, அவங்க உங்களால எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க.வெண்பா எங்க அம்மாவை தப்பா பேசின ஒரே காரணத்தினால் தான் அவளுடைய மண்டையை உடைத்தேன் ஆனால் வெண்பா எத்தனையோ முறை எங்க அம்மாவே தப்பா பேசியிருக்க ஆனால் நீங்க ஒண்ணுமே செய்யல. அதனால நீங்க எனக்கு வேண்டாம் என்று சொல்ல, லட்சுமியும் நானும், நீங்க இருவரும் ஏதோ சின்ன காரணத்தினால தான் சண்டை போட்டு இருப்பீங்கன்னு தான் நினைச்சேன். ஆனா எங்க அம்மாவை இவ்வளவு கேவலமா பேசி இருக்கீங்க என இப்பதான் தெரிகிறது. அதனால நானும் எங்க அம்மா கூடவே இருந்துடுறேன் என இருவரும் கூறுகின்றனர்.

தனி மரமான பாரதி
மேலும் ஹேமா நீங்க என்னை அனாதை குழந்தைன்னு தானே சொல்லி வளர்த்தீங்க அப்படியே நினைச்சுக்கோங்க. நான் இனிமேல் அம்மாவோடவே இருக்க ஆசைப்படுறேன் என கூறுகிறார். அடுத்ததாக லட்சுமி எனக்கு எல்லாமே எங்க அம்மா தான் இதுவரைக்கும் எனக்காக பண்ணி இருக்காங்க, அதனால நானும் அம்மாவுடன் தான் இருப்பேன். நீங்க எங்களுக்கு வேண்டாம் என சொல்ல கண்ணம்மா குழந்தைகளோடு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications