அடுத்த வாரத்தோடு முடிவடையும் பாரதிகண்ணம்மா..கடைசி நேரத்தில் அறிமுகமாகும் முன்னணி வெள்ளித்திரை நடிகர்
பாரதிகண்ணம்மா சீரியலின் இறுதி எபிசோட் நடிகர் ஆர்.ஜே பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் இறுதி எபிசோடுகள் அடுத்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் ஆர் ஜே வாகவும் இப்போது நடிகராகவும் இருக்கும் பாலாஜி பாரதிகண்ணம்மா சீரியலின் கடைசி எபிசோடில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ட்ரோல்களால் பிரபலம்
பல வருடங்களாகவே பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடிவடையும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. நான்கு வருடங்களை தாண்டி இருந்தாலும் அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்கும். இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து அதிகமான ட்ரோல்ஸ்களால் பாப்புலர் ஆகிவிட்டது. பட்டி தொட்டி எல்லாம் இந்த சீரியலின் மீம்ஸ்கள் பிரபலமடைந்து என்னதான் இந்த சீரியலில் இருக்கிறது என்று இந்த சீரியலை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்துவிட்டது.

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை
அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை கலாய்த்து வந்தாலும் இந்த சீரியலின் ரசிகர்கள் குறைந்த பாடு இல்லை. அதனால் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் இதுவும் இருந்து வருகிறது. டிஆர்பியில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இது பிடித்திருக்கிறது. பாரதியின் டிஎன்ஏ டெஸ்டை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த சீரியல் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. அதிகமாக ரசிகர்களின் கெஞ்சல்களின் காரணமாகவோ என்னவோ இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியது. சில மாதங்களுக்கு முன்பு இந்த தகவல்கள் வெளியானதும் பலர் நிம்மதி பெருமூச்சு விட்டு முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் சீரியல் அணியினர் டிஆர்பி அதிகரிக்க தொடங்கியதும் சீரியலை மீண்டும் இழுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

மீண்டும் திருமணம்
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ப்ரொமோவில் இறுதி அத்தியாயத்தை நோக்கி என்ற தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து ரசிகர்கள் எப்போது இந்த சீரியல் முடிவடையும் என்று கேள்வி கேட்க இன்னும் ஒரு சில ரசிகர்கள் அட இப்பவே இந்த சீரியலில் முடிக்கணுமா? இன்னும் கொஞ்ச நாள் போகக்கூடாதா என்று அப்பாவித்தனமாகவும் கமாண்டுகளை அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட்க்கு பிறகு கண்ணம்மா பாரதியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கிராமத்திற்கு சென்றிருந்த நிலையில் பாரதி அங்கே வந்து கண்ணம்மாவின் மனதை மாற்றி தற்போது குடும்பத்தோடு சேர இருக்கிறார். மீண்டும் கண்ணம்மாவிற்க்கும் பாரதிக்கும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து திருமணத்தை நடத்த இருக்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்கள்
இந்த நிலையில் தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் நடப்பதோடு சீரியல் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாரதிக்கு பழையது எல்லாம் நினைவு வந்ததும் சீரியல் முடித்து விடுவார்கள் என்று பலர் நம்பிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது திருமணத்தை வைத்திருக்கின்றனர். அதுவும் கண்ணமா ஆசைப்பட்டது போலவே பசுமை வாய்ந்த வயல்வெளியின் நடுவில் தான் பாரதி மற்றும் கண்ணம்மாவில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண வரவேற்பிற்கு ஆர் ஜே பாலாஜி சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ரன்னர் அப் ஆக தேர்வான ஷிவினும் பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதியில் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications