பாரதி கொடுத்த பரிசால் கதறி அழும் கண்ணம்மா.. எடுத்துசொல்லும் தாமரை..எதிர்பாராத சீரியலின் கடைசி முடிவு
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மனதை மாற்றுவதற்காக பாரதி புது நாடகம் நடித்திருக்கிறார்.
கண்ணம்மாவிற்கு 10 வருடங்களுக்கு முன்பு பாரதி கொடுத்த அவருடைய அம்மாவின் புகைப்படத்தை பார்த்து கண்ணம்மா கதறி அழுகிறார்.
பாரதியோடு சேர்ந்து வாழ கூறி தாமரை கண்ணம்மாவின் மனதை மாற்றுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நவீன திருவிளையாடல்
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று எபிசோட்டின் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவின் மனதை மாற்றுவதற்காக நவீன திருவிளையாடல் என்னும் நாடகத்தை நடத்துகிறார். அதில் சீரியல் நடிகை காயத்ரி அவருடைய கணவரோடு சேர்ந்து இந்த சீரியலில் சிவனும் பார்வதியும் ஆக நடிக்கின்றனர். லட்சுமி முருகராக நடிக்கிறார். முருகனாக நடிக்கும் லட்சுமி தன்னுடைய அப்பாவின் மீது கோபத்தில் இருக்கும் போது தனக்கும் சிவனுக்கும் ஏற்பட்ட சண்டையை குறித்து பார்வதி எடுத்துக்காட்டு கூறுகிறார். அதில் தன்னுடைய அப்பாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சிவனிடம் பார்வதி அனுமதி கேட்க ,சிவன் அனுமதி கொடுக்காததால் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்கு சென்ற பிறகு அங்கே பார்வதிக்கு கிடைக்கும் அவமானத்தால் மீண்டும் சிவனிடம் வந்து மன்னிப்பு கேட்கும் போது, சிவன் பார்வதியை எரித்து விடுவதால், அங்கிருக்கும் ஞானிகள் சிவனுக்கு எடுத்துக் கூறி பார்வதியை மன்னிக்க கூறுகின்றனர். பின்பு சிவனும் பார்வதியும் ஒன்று என சிவன் கூறுகிறார். பார்வதியில்லாமல் சிவனால் முடியாது, சிவன் இல்லாமல் பார்வதியால் முடியாது, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறி அந்த நாடகத்தை முடிக்கின்றனர்.

கதையை ஏத்துக்காத கண்ணம்மா
திருவிளையாடல் நாடகம் முடிவடைந்ததும் அனைவரும் பாரதியை பாராட்டுகின்றனர். கண்ணம்மா மட்டும் பாரதியை கூப்பிட்டு நாடகம் நன்றாக இருந்தது ஆனால் கடைசி கருத்து தான் சரியாக இல்லை. சிவனால் வேணும் என்றால் பார்வதி இல்லாமல் இருக்க முடியுது ஆனால் பார்வதியால் எப்போதும் சிவன் இல்லாமல் இருக்க முடியாது. இந்த உலகத்தில் எத்தனையோ பேர் கணவன் இல்லாமல் சிங்கிள் மதராக தன்னுடைய குழந்தைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று வசனம் பேசுகிறார். பாரதி எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே மௌனமாக இருக்கிறார்.

கதறி அழும் கண்ணம்மா
பின்பு வீட்டிற்கு வரும் கண்ணம்மா கையில் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டே இருக்கிறார். தன்னுடைய மாமியாருக்காக பாரதி இறந்த நாளில் எவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார் என தாமரை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணம்மா எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டிருக்க இது என்ன போட்டோ என தாமரை கேட்கிறார். அதற்கு இது நானும் என்னுடைய அம்மாவும் எடுத்துக் கொண்ட போட்டோ. இது மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. இந்த போட்டோ எடுத்த சில நாட்களில் என்னுடைய அம்மா இறந்து விட்டாராம் என்று சொல்லகிறார்.

பாரதி கொடுத்த நினைவு பரிசு
இதை அப்போ நீ பத்திரமாக இத்தனை வருடமாக வச்சிருக்கியா? என தாமரை கேட்கிறார். ஆமாம் ஆனால் இது எனக்கு கிடைத்தது அவரால் தான். பாரதி தான் பத்து வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய அம்மாவின் புகைப்படத்தை எனக்காக தேடி கண்டுபிடித்து கொடுத்தார். என்னிடம் எதுவுமே இல்லாமல் தான் இருந்தது. இந்த போட்டோ என்கிட்ட இருக்கும்போது தான் என்னுடைய அம்மா என் கூட இருக்கிற மாதிரி இருக்கு என்று கண்ணம்மா பேச, பாரதி உனக்காக இத்தனை விஷயங்களை பார்த்து பார்த்து செய்கிறார். நீ அவர் மீது வைத்திருக்கும் கோபத்தை குறைத்துக் கொள்ளலாம். ஏதோ தெரியாமல் அப்படி செய்து விட்டார் என்று தாமரை பேச, நான் இதை உங்களிடம் சொன்னால் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும் என்று கண்ணம்மா கோபமாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications