Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டதெல்லாம் சரிவு.. மனோஜ் கடைசியாக போனில் பேசிய விஐபி? உதவி கேட்டப்போ பண்ணாம இப்ப அழறாங்க: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோஜ் எந்த சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்ளாதவர்.. தவறாக எங்கேயும் சிக்கிக் கொள்ளவுமில்லை.. வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத அழுத்தம்தான் மரணம் வரை கொண்டு சென்றுவிட்டது. உதவி கேட்டு வந்தபோதே, யாராவது மனோஜ்க்கு உதவியிருக்கலாம்.. இன்னைக்கு வந்து அவரது சடலத்தை கண்டு கண்ணீர் வடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை' என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "மனோஜ் பாரதிராஜா நல்ல மனிதர்.. தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்ற அழுத்தம்தான் அவரை பெருமளவு பாதித்துவிட்டது.

Television Manoj bharathiraja VIP

மிகுந்த பொருட்செலவில் தாஜ்மஹால் படம் எடுத்தார்.. பல விஷயங்களை போராடி செய்தும், பாரதிராஜாவால் மகனை பெரிய ஹீரோவாக கொண்டு வர முடியவில்லை. தான் பெரிய நடிகராக முடியவில்லையே என்ற வருத்தம், மனோஜ்க்கு அப்போதே இருந்தது.

தொட்டதெல்லாம் சறுக்கல்

பிறகு டெக்னிக்கலாக கற்றுக் கொள்ளலாம் என்று மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தார்.. அங்கு டைரக்ஷனை கற்றுவந்தும்கூட, மிகப்பெரிய அளவில் மனோஜால் டைரக்‌ஷனில் ஜெயிக்க முடியவில்லை.. சிவப்பு ரோஜாக்கள் 2 எடுப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டது, பூஜையும் போடப்பட்டது. ஆனால், அந்த படம் எடுக்க முடியாமல் தடங்கலாகிவிட்டது.

இப்படியே பல கஷ்டங்கள் மனோஜ்ஜை சூழ்ந்து கொண்டன. சொத்துக்களை பொறுத்தவரை அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், கையில் பணம் இல்லை.. பாரதிராஜா நடித்து வரும் பணம்தான் அவருக்கு பிரதானமாக உதவி வந்திருக்கிறது.

அதேபோல, கையில் நிறைய கதைகளை வைத்து, சில நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் சென்று பார்த்திருக்கிறார்.. வாய்ப்பும் கேட்டுள்ளார்.. ஆனால், ஹீரோக்கள் பெருமளவில் மனோஜூக்கு ஒத்துழைப்பு தரல.. தயாரிப்பாளர்களும் மனோஜ்ஜை கை தூக்கி விடணும் என்று நினைக்கவில்லை.. கண்டுக்கொள்ளவும் இல்லை. ஆனால், இன்று மனோஜ் இறந்ததுமே எல்லாருமே வர்றாங்க, அஞ்சலி செலுத்தறாங்க, கண்ணீர் சிந்தறாங்க, புகழ்றாங்க.

மன நிம்மதி ஒருத்தனுக்கு முக்கியம்

ஒரு மனிதன் வாழும்போதே நல்லது செய்யணும். ஒருத்தன் வாய்விட்டு உதவி கேட்கும்போதே, கைதூக்கி விட்டால், அத்தனை பேருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். அந்தவகையில், உதவி கேட்டு சென்றும், மனோஜின் வாழ்க்கைக்கதவு திறக்கப்படவில்லை. என்னதான் இருந்தாலும், ஒரு மனிதனுக்கு மன நிம்மதி முக்கியம்.. யாராவது ஒருவர் உதவியிருந்தால், மனோஜ்க்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது.

மன அழுத்தம், நிம்மதியின்மை, கஷ்டம் போன்றவை அனைத்தும் சேர்ந்து, அடுத்தக்கட்டத்துக்கு மதுவில் விழுந்துவிடுகிறார் மனோஜ்.. மதுவில் யார் விழுந்தாலும் வெற்றி தேடி வராது. மனோஜூம் இதற்கு விதிவிலக்கல்ல. மனோஜ் நீலாங்கரையிலும், பாரதிராஜா சேத்துப்பட்டிலும் தனித்தனி வீட்டில் உள்ளனர்.. இருவருக்குள்ளேயும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரிகிறது. சரியான முறையில் பேச்சுவார்த்தை இல்லை என்கிறார்கள். அந்தவகையில், மனோஜ், பாரதிராஜா இருவருக்குமே நிம்மதி இல்லை.

பைபாஸ் சர்ஜரி - பணக்கஷ்டம்

இந்நிலையில்தான் உடல்நிலை பாதிக்கப்படுகிறார் மனோஜ். பைபாஸ் ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள்.. ஆனால், சர்ஜரிக்குகூட செலவு செய்வதற்கு பணம் கிடையாது. இதுதான் உண்மை. பண உதவி செய்ய ஆட்களும் இல்லை.. தங்களுடைய பல சொத்துக்களில் ஏதாவது ஒன்றை விற்றோ, அடகு வைத்தோ சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம்.

யாரிந்த விஐபி

2 வாரத்துக்கு முன் பைபாஸ் நடந்து, வீட்டுக்கு வந்துள்ளார்.. உடல்நிலையும் தேறி வந்துள்ளது.. நேற்று மாலை 3 மணிக்கு, முக்கியமான விஐபி ஒருவரிடம் மனம்விட்டு பேசிட்டு இருந்தாராம் மனோஜ்.. அப்போது, அவரிடம் அழாத குறையாக தன்னுடைய பிரச்சனைகளை சொல்லி உள்ளார். அந்த விஐபியும், பாரதிராஜாவிடம் இதுகுறித்து பேசுவதாக சொல்லி, மனோஜ்ஜுக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். அடுத்த 2 மணி நேரத்தில் மனோஜ் இறந்துவிட்டார்.

ஆனால், மனோஜ் எந்த சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்ளாதவர்.. தவறாக எங்கேயும் சிக்கிக் கொள்ளவுமில்லை.. வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத அழுத்தம்தான் மரணம் வரை கொண்டு சென்றுவிட்டது. உதவி கேட்டு வந்தபோதே, யாராவது மனோஜ்க்கு உதவியிருக்கலாம்.. இன்னைக்கு வந்து அவரது சடலத்தை கண்டு கண்ணீர் வடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+