லட்சம் லட்சமாக பணம் தந்தாலும், 6 மணிக்கு மேல் நடிக்க மறுக்கும் நடிகை.. புதுக்கோட்டையில் ஒரு வருத்தம்
சென்னை: நடிகை சுகன்யாவுக்கு இன்றும் ஒரு வருத்தம் உள்ளது.. கலாச்சேத்ராவை போல நாட்டிய பள்ளியை சொந்தமாக நடத்தி, உலகம் முழுக்க அதற்கு கிளைகளை பரப்பி, பல நாட்டிய பெண்களை உருவாக்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை. ஆனால், சினிமா துறைக்கு வந்துவிட்டதால், அதை தன்னால் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று இன்னமும் வருத்தமாக சொல்வார் சுகன்யா என்று தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.
Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "விவாகரத்துக்கு பிறகு அமெரிக்கா திரும்பிய நடிகை சுகன்யா, மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார்.. இதற்கு பிறகுதான், சுகன்யாவுக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் வர துவங்கியது.
அந்தவகையில் ஆனந்தம் என்ற சீரியல் பட்டிதொட்டியெங்கும் சுகன்யாவின் நடிப்பை கொண்டுபோனது.. ஏராளமானோர் இந்த சீரியலுக்கு ரசிகர் ஆனார்கள். "ஆனந்தம் சீரியலை மட்டும் நிறுத்திவிடாதீங்க, சுகன்யாவின் நடிப்பை நாங்கள் ரசிக்கிறோம்" என்று சம்பந்தப்பட்ட டிவி நிறுவனத்துக்கே நிறைய போன்கள் அப்போது வருமாம்.

ஆழ்ந்த அறிவு - முதிர்ந்த ஆலோசனை
கேரளாவில் எந்த திரைப்பட விழா நடந்தாலும், சுகன்யா இல்லாமல் நடக்காது.. சர்வதேச திரைப்பட விழா எங்கு நடந்தாலும், தென்னிந்திய மொழிகளில் முதல் முக்கியத்துவம் சுகன்யாவுக்குதான்..
காரணம், தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் எங்கே தவறு உள்ளது,? என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடுவாராம்.. அதனால்தான், நடுவர்களின் வரிசையில் சுகன்யாவும் கட்டாயம் அமர்ந்திருப்பார்..
எந்த சீனில் என்ன தவறு உள்ளது? வசனத்தில் உள்ள தவறு? என்பது உள்பட அந்த திரைப்பட குழுவுக்கே ஆலோசனை சொல்லக்கூடிய அளவுக்கு ஞானம் பெற்றவர் சுகன்யா. அந்த அளவுக்கு திரைப்படத்துறையில் சுகன்யாவுக்கு ஆழ்ந்த அறிவு.. நடனத்திலும் ஆழ்ந்த அறிவு.. இசையிலும் ஆழ்ந்த அறிவு.
நிறைவேறாத ஆசை
ஆனால் சுகன்யாவுக்கு இன்றும் ஒரு வருத்தம் உள்ளது.. கலாச்சேத்ராவை போல நாட்டிய பள்ளியை சொந்தமாக நடத்தி, உலகம் முழுக்க அதற்கு கிளைகளை பரப்பி, பல நாட்டிய பெண்களை உருவாக்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை. ஆனால், சினிமா துறைக்கு வந்துவிட்டதால், அதை தன்னால் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று இன்னமும் வருத்தமாக சொல்வார் சுகன்யா.
தொழிலாளர்களுக்கு சரியான ஓய்வு
அதேசமயம், எந்த திரைப்பட நடிகர்களுக்குமே இல்லாத ஒரு சிறப்பு சுகன்யாவிடம் உள்ளது.. அது என்னவென்றால், லட்சம் லட்சமாக பணத்தை கொட்டி கொடுத்தாலும், சாயங்காலம் 6 மணிக்குள் ஷூட்டிங் முடிக்க வேண்டும் என்பார்.
தொழிலாளிக்கு எப்படி 6 மணியுடன் பணி முடிகிறதோ, அதுபோல, திரைப்பட துறையை சார்ந்த தொழிலாளர்களையும் மாலை 6 மணிக்கு பணியிலிருந்து விடுவித்து விட வேண்டும், அனைவருக்கும் சரியான ஓய்வு தர வேண்டும். அப்போதுதான் மறுநாள் காலையில் அவர்களால் உற்சாகத்துடன் நடிக்க முடியும்" என்பார்.. இந்த பழக்கத்தை நீண்ட காலமாகவே சுகன்யா கடைப்பிடித்து வருகிறார்.
புதுக்கோட்டையிலிருந்து கோரிக்கை
அதேபோல, இன்னொரு தகவலும் உண்டு.. அதாவது, புதுக்கோட்டை பக்கத்தில் கீழ்முடி என்ற கிராமத்தில் சுகன்யாவுக்கு குலதெய்வம் இருப்பதாக தெரிகிறது. அதனால் வருடா வருடம் இந்த கோயிலுக்கு சுகன்யா சென்றுவிடுவார்.. ஆனால், அந்த கோயிலுக்கு செல்வதற்காக சரியான பாதை இல்லை.. ஒன்றரை கிலோ மீட்டர் மெயின்ரோட்டிலிருந்து கல், முள் பாதையில்தான் கோயிலுக்கு செல்ல வேண்டியிருக்கும். கழிப்பிட வசதியும், தண்ணீர் வசதியும் இல்லை.
இதனால் அங்கிருந்த சுற்றுவட்டார மக்கள் சுகன்யாவிடம், "உங்களுடைய குலதெய்வம் அமைந்துள்ள இந்த ஊருக்கு நல்ல சாலை வசதி, கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று ஏற்கனவே பலமுறை கோரிக்கை வைத்திருந்தார்கள்.. ஆனால், அதுகுறித்த முயற்சியை இன்றுவரை சுகன்யா மேற்கொள்ளவில்லை, தங்களது கோரிக்கையை கண்டுகொள்ளவுமில்லை என்ற வருத்தம் அந்த கீழ்முடி மக்களுக்கு இன்றும் உள்ளது.












Click it and Unblock the Notifications