Bigg Boss: ஒரு மனுஷனுக்கு இப்படியா சோதனை வரணும்? பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம்! வெளியேறிய பிளாக் பாண்டி
சென்னை: சிலருக்கு என்னதான் திறமை இருந்தாலும் அவர்களுடைய உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலை இருக்கிறது. அதேபோலத்தான் நடிகர் பிளாக் பாண்டி நிலைமையும் இப்போ மாறி இருக்கிறது. பிளாக் பாண்டிக்கு பல போராட்டங்களுக்கு பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி கிடைத்தது என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் அவர் திடீரென்று வெளியேறி இருப்பது அனைவருக்குமே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
பிக் பாஸ் 10 போட்டியாளர்
பிளாக் பாண்டியை கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு பிறகு அங்காடித்தெரு படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் சமீப காலமாக அவருடைய படங்கள் பெரிதாக அவருக்கு பிரபலம் வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் பிளாக் பாண்டி
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் தன்னால் முடிந்த அளவிற்கு என்டர்டைன்மெண்ட் செய்து கொண்டிருந்தார். அதிகமாக நெகட்டிவ் வாங்காமலும் இருந்தார். பழைய பாடல்களை இவர் பாடியது கூட நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது. இவருக்குள் இத்தனை திறமையா என்று பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் நேற்று நள்ளிரவில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்திருக்கிறது.
பிக் பாஸ் ப்ரோமோ
அதாவது நேற்று வெளியான ப்ரோமோவில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். நள்ளிரவு நடந்த லச்சரி பட்ஜெட் டாஸ்கிலும் கூட அவர் சிறப்பாகவே செய்திருந்தார். ஆனாலும் தன்னால் போட்டியாளர்களுக்கு சரியான சாப்பாடு பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பட்ஜெட்டில் சொல்ல முடியவில்லை என்று அழுது கொண்டு வெளியேறினார். அவரை இந்த வீட்டின் தலைவராக இருக்கும் ஷாதிகா சமாதானப்படுத்தி இருந்தார்.
வெளியேறிய பிளாக் பாண்டி
அதற்கு முன்பு உள்ளே நடந்த சில கலவரங்களின் போது கூட பாண்டிதான் முன்னின்று அனைவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் கிச்சன் டீமில் இவர் இருக்கும்போது திடீரென இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அப்போது மருத்துவர்கள் வந்து செக் பண்ணி பார்த்ததில் இவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்களாம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் கட்டிப்பிடித்து முத்தம்.. இத்தனை கேமரா முன்னாடியே இப்படியா?
அதனால் அவர் பிக் பாஸிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல கனவுகளோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த இவர் சில நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் மீண்டும் இவர் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
