ஹிந்தி பிக் பாஸில் கதறி அழும் ஸ்ருதிகா.. இவருக்கா இந்த நிலைமை? கணவர் வெளியிட்ட திடீர் பதிவு
சென்னை: ஹிந்தி பிக் பாஸின் 18 வது சீசனில் தமிழ் நடிகையாக ஸ்ருதிகா போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் நேற்று அந்த நிகழ்ச்சியில் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. அந்த வீடியோவை ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் பகிர்ந்து அதற்கு தன்னுடைய கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலரால் மட்டும் தான் இந்த தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தானும் மகிழ்ச்சியாக இருந்து தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைக்க முடியும். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ஸ்ருதிகா. இவர் ஸ்ரீ திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலமானார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஸ்ருதிகா கோமாளிகள் போல செயல்பட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பு பெற்றுவிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றதும் இவருக்கு மதிப்பு அதிகமாக கூடியது. நடிகையாக மட்டுமல்லாமல் பிசினஸையும் கவனித்து வரும் இவர் பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் தொடங்கிய அதே நாளில் பிக் பாஸ் ஹிந்தியின் 18 வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஹிந்தி பிக் பாஸில் முதல் முறையாக கலந்து கொண்ட தமிழ் நடிகை என்று அங்கீகாரத்தை பெற்ற ஸ்ருதிகா அந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளிலிருந்து கலகலப்பாக இருந்து வருகிறார். தன்னை பற்றி உள்ளிருக்கும் போட்டியாளர்கள் முதுகுக்கு பின்னாடி பேசினாலும் கூட அதை கண்டுகொள்ளாமல் அவர்களின் முகத்துக்கு நேராகவே நீங்கள் என்னை கேலி செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஆனால் அதற்காக உடைந்து போய் இருக்கிற ஆள் நான் கிடையாது கெஞ்சி கெத்தாக பேசியிருக்கிறார்.
அதோடு, எதையும் முகத்துக்கு நேராக சொல்லுங்கள். கிண்டலுக்கும் கேலிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யாரையும் கேலி செய்து நீங்கள் சந்தோஷப்படாதீர்கள். அடுத்தவர்களை சந்தோஷமாக வைப்பதற்கு என்ன வழி உண்டு அதை மட்டும் பாருங்கள் என்று பதிலடி கொடுத்து விடுகிறார். ஆரம்பத்தில் இவருடைய நடவடிக்கைகளை பார்த்து விமர்சித்து வந்த ஹிந்தி ரசிகர்கள் இப்போது அவரை பாராட்ட தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் நிகழ்ச்சியில் தனியாக உட்கார்ந்து திடீரென்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சக போட்டியாளர் ஒருவர் அவரிடம் கேட்க அதற்கு ஸ்ருதிகா எனக்கு இங்கு ஒரு கப் டீ கூட கிடைக்கவில்லை. நான் டீ குடிக்க ரொம்பவும் ஆசைப்படுபவர். ஆனால் இங்கு எனக்கு டீ தராமல் ஒளித்து வைத்து விடுகிறார்கள்.
நான் போனால் பால் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பால் இல்லாமல் பிளாக் காபி குடிக்க சொல்கிறார்கள். என்னால் அப்படி குடிக்க முடியாது என்று அழுது கொண்டே சொல்லி இருக்கிறார். அந்த வீடியோவை ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த வீடியோவின் கடைசியில் இதுதான் கர்மா என்று சொல்வது என்று கூறியிருக்கிறார்.
அதற்குக் காரணம் இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதிகா பேசும்போது டீ என்றால் டிகாஷன் போட்டு கொதிக்க விட்டு பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு அதில் நாட்டு சக்கரையை போட்டு நுரை வருகிற மாதிரி ஆத்தி குடிக்கிறது தான். என்னை பொருத்தவரைக்கும் பிளாக் டீ எல்லாம் டீயே கிடையாது. அது வெண்ணீர் என்று ஸ்ருதிகா பேசிய அந்த டயலாக்கை தற்போதைய அழுத வீடியோவோடு இணைத்து, "இதுதான் கர்மா.. இருக்கிறதை வச்சு சந்தோஷப்படணும். இப்போ எங்களோட அருமை உனக்கு புரியுதா என்று கிண்டலாக அர்ஜுன் அதில் எடிட் செய்து இருக்கிறார்.
இதை பார்க்கும் ரசிகர்கள் இத்தனை நாட்களாக சிரித்துக்கொண்டு கலகலவென பேசிக் கொண்டிருந்த பெண் இப்போது ஒரு டீக்காக அழுது கொண்டிருக்கிறது அதை வைத்து அவருடைய கணவர் இப்படி கலாய்க்கிறாரே பாவம் ஸ்ருதிகா என்று கூறி வருகிறார்கள். ஸ்ருதிகா இந்த வார எலிமினேஷனில் இருக்கிறார்.
ஆனால் அவருக்கு ரசிகர்கள் வரவேற்பு இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் பலருக்கு அவருக்கு எப்படி வாக்கு செலுத்த வேண்டும் என்பது தெரியாததால் அவருக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்குமா? இல்லையா? என்பது கேள்வி குறியாக இருக்கிறது. ஹிந்தியில் அத்தனை பேர் மத்தியில் ஒரே தமிழ் பெண்ணாக ஸ்ருதிகா கலக்கி கொண்டு இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பப்பட்டாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications