“ஆமா.. பழிக்குப் பழி தான் வாங்குறேன்”.. பப்ளிக்காக உண்மையை ஒப்புக் கொண்ட ’கொழந்தப்புள்ள’!
ஜனனியை பழிக்குப் பழி வாங்குவதாக ஐஸ்வர்யா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக உள்ள ஐஸ்வர்யா தத்தா, ஏறக்குறைய சர்வாதிகாரியாக நடந்து வருகிறார்.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாகியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. அதன் தொடர்ச்சியாக வீட்டில் உள்ள போட்டியாளர்களை சமையலுக்கு, பாத்திரம் கழுவ மற்றும் கழிப்பறை தூய்மைப் படுத்த என மூன்று குழுக்களை அவர் பிரித்தார்.
இதில் மும்தாஜுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டாஸ்க் இல்லை:
அதனைத் தொடர்ந்து டாஸ்க்குகள் ஏதும் இல்லாததால், அனைவரும் அமர்ந்து முந்தைய வாரங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புறணி பேசுபவர்கள் குறித்து மாறிய பேச்சு, பின்னர் வாக்குவாதம் ஆனது.

பகலில் உறக்கம்:
ஐஸ்வர்யாவும், பாலாஜியும் இது குறித்து காரசாரமாகப் பேசினர். பின்னர் பிக் பாஸ் வீட்டில் ஜனனி, சாரிக் மற்றும் யாஷிகா ஆகியோர் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், அதனால் அவர்கள் பகலில் சிறிது நேரம் உறங்குவது குறித்தும் பேச்சு திரும்பியது.

யாஷிகா விவகாரம்:
ஆனால், அதற்கு அனுமதி இல்லை என தலைவி ஐஸ்வர்யா வாதம் செய்தார். அதோடு ஜனனி முதல் வாரம் தலைவியாக இருந்தபோது, உடல்நலமில்லாமல் இருந்த யாஷிகாவிற்கு இரக்கம் காட்டவில்லை என்றும் வாதிட்டார்.

ஜனனி விளக்கம்:
ஆனால், அப்போது வீட்டிற்கு அனைவரும் புதியவர்கள் என்பதால் தனக்கு விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தார் ஜனனி. ஆனாலும் தன் பிடியில் இருந்து இறங்கி வர ஐஸ்வர்யா மறுத்தார்.

ஒப்புக் கொண்ட ஐஸ்:
இதனால், ‘அப்போது நடந்ததற்கு இப்போது பழிக்குப் பழி வாங்குகிறாயா?' என பாலாஜி கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா, ‘ஆமாம் பழி தான் வாங்குகிறேன்' என குழந்தைத்தனமாக ஒப்புக் கொண்டார். பின்னர் ஒரு வழியாக உடல்நலக் குறைவானவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும், நாய் குரைத்தால் பிறகு எழுப்பி விடலாம் என அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications