பிக் பாஸ் 2 : சினேகன் ‘இப்டி’ பண்ணுவார்னு கமலே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!
பிக் பாஸ் வகுப்பறையில் சினேகனின் செயல் பார்வையாளர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தமிழ் ஆசிரியராக வந்த சினேகன், வகுப்பில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து அமரக் கூடாது எனக் கூறியது பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக 'கனா காணும் காலங்கள்' என்ற டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களாக மாறினர் போட்டியாளர்கள்.
ஏற்கனவே, மாணவர்கள் என்ற போர்வையில் போட்டியாளர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடந்து, பார்வையாளர்களை கடுப்பேத்தினர். இது போதாதென்று கவிஞர் சினேகனும் தமிழாசிரியராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

ஆரம்பமே அட்வைஸ்:
"பிள்ளைங்களா.. நல்லா படிக்கணும்.. என்ன..! என்கிற உபதேசத்தோடு வகுப்பில் நுழைந்த சினேகன், அடுத்ததாக செய்தது தான் அதிர்ச்சி ரகம். வகுப்பறையில் கலந்து அமர்ந்திருந்த ஆண்களையும், பெண்களையும் பாலின அடிப்படையில் தனித்தனியாக அமர வைத்தார்.

விழிப்புணர்வு:
பல பள்ளிகளிலேயே இது போல் தற்போது அமர வைப்பதில்லை. சிறு வயது முதலே பாலின சமத்துவத்தை நோக்கிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால், அதனை ஊக்குவிக்க வேண்டிய ஊடகத்தில் இப்படி சினேகன் நடந்து கொண்டது ரசிக்கும்படி இல்லை.

கமல்:
நம்மவர் படத்தில் கமல் கல்லூரியிலேயே இத்தகைய புரட்சி வேண்டும் என வாதாடுவார். ஆனால், அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சினேகனின் இந்த செயல் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தவாரம் இது குறித்து கமல், சினேகன் தலையில் குட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லூட்டி:
அதோடு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை சினேகன் டிவியில் பார்க்கிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. அப்படிப் பார்த்திருந்தால், மஹத் அண்ட் கோ அடிக்கிற லூட்டி பற்றி தெரிந்திருக்கும். அதோடு ஒப்பிடுகையில் வகுப்பறையில் அருகருமே அமர்வது பெரிய விசயமில்லை என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications