Bigg Boss 3 Tamil: செம நடிப்பும்மா லாஸ்லியா?.. சேரன் அப்பாவை இப்படி ஏமாத்துவியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஹிட் ஷோ பிக் பாஸ். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அத்துமீறல் நிறைய இருக்கிறது. காரணம் நிகழ்ச்சியை நடத்தும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ் எல்லைகள் வகுத்து கொடுத்து இருக்கிறார்கள் போலும்.

ஆரம்பத்தில் இருந்தே கமல் நிகழ்ச்சியில் அதிகம் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போலவே இருக்கிறார்.அவர் வரும் அந்த இரண்டு நாட்களில் சுவாரஸ்யம் குறைந்து இருக்கிறது.

என்றாலும், அந்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டம், ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அங்கேதான் கலைஞன் கமல்ஹாசன் நிற்கிறார்.

சேரன் கமல்ஹாசன்

சேரன் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நேற்று வந்த போது சேரன் அப்பா, வேற அப்பாவா ஆகிட்டாரான்னு கேட்டபோது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அப்போ நான் மனசளவில் உடைஞ்சு போயிட்டேன்னு சொன்னார். சேரன் தரப்பில் சரியான விளக்கம் தரப்பட்டது. அவர் இன்னும் பேசித் தீர்த்துக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு என்றும் சேரன் சொன்னார்.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

அதன் படி லாஸ்லியாவை அழைச்சுட்டு வந்து தனியா பேசினார். மனம் உருக பேசினார். லாஸ்லியாவிடம் சேரன் சாக்லேட் உனக்கு குடுத்துட்டுத்தான் எப்போதும் சாப்பிடுவேன். இப்போது என் படுக்கைக்கிட்டே போயி பாரு உன்னோட ஷேர் அப்படியே இருக்கும்னு சொன்னார். அப்போதுதான் லாஸ் என்னவோ அழுது வைப்போமே என்பது போல அழுதார். அப்போதும் அவரை தன் தோளில் சாய்த்து சேரன் ஆறுதல் கூறினார்.

லாஸ்லியா கவின்

லாஸ்லியா கவின்

சிறிது நேரத்தில் கவின் லாஸ்லியா இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது, ரெண்டு விஷயம் ஜெயிலுக்கு போறதுக்கு, அடுத்து குட்நைட் சொல்லாமல் போனதற்கு என்று சொல்லி அவர் சாரி கேட்டார் என்று மட்டும் சொன்னவர் ,பிறகு சாக்லேட் விஷயம் பற்றியும்சொன்னார். அப்போது லாஸ் தான் அழுதது பற்றி கவினிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.

விளக்கணைத்த பின்னரும்

விளக்கணைத்த பின்னரும்

இரவு விளக்கு அணைத்த பின்னும் கவினுடன் சேர்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருந்தார் லாஸ்லியா. நீ எதுக்கு இங்கே இருக்கேன்னு கவின் கேட்க, சும்மாதான்னு சொன்னார் லாஸ்.நீ இந்த டீம்ல இருக்கியான்னும் கேட்டார்..இல்லே சும்மாதான்.நீ எதுக்கு இப்போ மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு லாஸ் கேட்டார்.இங்கே நடக்கற டிராமாவை என்னாலை பார்த்துக்கிட்டு இருக்க முடியலை மச்சான்னு சொன்னார் கவின்.

இது டிராமாவா?

இது டிராமாவா?

எதுக்கு என்கிட்டே மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு மறுபடியும் லாஸ் கேட்க, டிராமா உன்கிட்டத்தானே நடக்குதுன்னு சொன்னார் கவின்.

இப்போ சொல்லுங்க கவினை லாஸ் பிடிக்கும்னு சொன்னது பிடிக்கும் மட்டும்தானா? மூணு வாரத்துக்கு முன்னால கவினை சேரன் அப்பா ஓபன் நாமினேட் செய்தது லாஸுக்கு பிடிக்கலை. நிச்சயமா லாஸ் சேரன் அப்பா உறவு நீடிக்காது. லாஸுக்கு கவின் சொல்வது வேத வாக்கு, கவின் மட்டுமே அவர் இலக்கு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+