Bigg Boss 3 tamil: யா-வில் முடியும் பெயர்களுக்கு பிக் பாஸில் யோகமாம்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக கடைசிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் யார் புகழடைகிறார்களோ இல்லையோ நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ், மீம்ஸ் கிரியேட்டர்ஸ் புகழடைந்து இருக்கிறார்கள்.
தங்களுக்கு பிடித்தவர்களை தூக்கி வைத்து, பிடிக்காதவர்களை கண்ட மேனிக்கு தாக்கிப் பேசுவது என்று இவர்கள் சுதந்திரம் எல்லை மீறிப் போயி, திட்டுவதை படிக்கவோ,கேட்கவோ கூட கூச்சம் வந்தது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்பட்டு இருக்கும்.
இப்போது இந்த பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சண்டைகள் மட்டும் அல்ல, நெட்டிசன்ஸ் சண்டைகள் கூட ஓய ஆரம்பித்து இருக்கிறது.

ஓய்ந்தது தலைவலி
ஸ்ஸ்..அப்பாடா ஓய்ந்தது தலைவலி என்று நிம்மதி பெருமூச்சு விடும் அளவுக்கு பிக் பாஸ் பலரையும் பாதித்து இருக்கிறது. பிக் பாஸ் முடிவுக்கு வந்து இருப்பதால், இனி பிக்பாஸ் வீட்டிலும் சண்டை இல்லை, வெளியிலும் நெட்டிசன்ஸ் சண்டை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விடத் தோன்றுகிறது.

ரசிகர்கள் ஆர்மிகள்
சிலர் ரசிகர்களாக இருந்து மட்டுமே கருத்து தெரிவிப்பார்கள், இன்னும் பலர் உச்சத்துக்கு சென்று ஆர்மி என்று ஆரம்பித்து தீவிரமாக பின்பற்றி வருவார்கள். இதெல்லாம் என்னடா தலைவலி என்று எண்ணினாலும், பிக் பாஸை தொடர்ந்து பார்க்கவும் செய்தார்கள் பலர்.

உங்கள் கருத்து
பிரபலங்களை சந்திக்க நேர்ந்தால் பிக்பாஸ் பற்றி உங்கள் கருத்து என்று கேள்வியை எப்போதும் தயாராக ஊடகங்கள் வைத்துக் கொண்டே இருந்தன.இந்த கேள்வி பலருக்கு பதில் கூற ஒரு வாய்ப்பாக இருந்தாலும்,பலருக்கு எரிச்சலையும் தந்து இருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஏமாற்றம் கமல்
நம்மவர் கமல்ஹாசன் இந்த சீசனில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை என்றுதான் பலரும் கருதி வருகிறார்கள், வழக்கமான இரண்டு பிக் பாஸில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஆக்கிரமித்த உலக நாயகன் கமல்ஹாசன் இந்த 3 வது சீசனில் இல்லை.என்று கூறலாம்.

பிக்பாஸ் சென்டிமென்ட்
இப்போது புதிதாக ஒரு சென்டிமென்டை பிக் பாஸ் ரசிகர்கள் உலவ விட்டு இருக்கிறார்கள். அதாவது, பிக் பாஸ் வீட்டில் கடைசி எழுத்து யா என்று முடிந்தால் அவர்களுக்கு புகழ் அதிகம் கிடைக்கிறதாம். முதல் சீசனில் ஓவியா, 2 வது சீசனில் ஐஸ்வர்யா .3 வது சீசனில் லாஸ்லியா.. இப்படி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications