பிக் பாஸ் 3:சுற்றி வளைத்த போலீஸ்.. நெருக்கடியில் மீரா, வனிதா.. வெளியேறும் 3 போட்டியாளர்கள்?
பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறும் சூழல் அங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சிசன் 3 கடந்த வாரம் தொடங்கியது. முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் ஒற்றுமையாக, அன்பாகவே இருந்தனர். மீரா மிதுனின் வருகையால் அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மதுமிதா கூறிய தமிழ்ப் பொண்ணு பிரச்சினையால் பலரது எதிர்ப்புகளை அவர் சம்பாதித்துள்ளார். இந்த வார நாமினேசன் லிஸ்டிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

குத்திக் காட்டிய வனிதா:
இதனால் பிக் பாஸ் வீட்டில் அவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார். அவரைப் பற்றி நேற்றைய எபிசோட்டில் வனிதா விஜயகுமாரும் காட்டமாகப் பேசினார். ‘அவர் தாலியைக் கழட்டி வைத்து விட்டு வந்திருப்பதாகவும், கலாச்சாரத்தைப் பற்றி பேசத் தகுதி இல்லை' என்றும் குத்திக் காட்டிப் பேசினார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா, அடிக்கடி தனியாக பேசி வருகிறார்.

மது புலம்பல்:
‘வீட்டில் பிரச்சினை இருந்தா பரவாயில்ல, வீடே பிரச்சினையா இருந்தா எப்படி?' என அவர் புலம்பி வருகிறார். இதேபோல், நெருக்கடிகள் அதிகரித்தால் அவர் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களும் இந்தப் பிரச்சினையை விடுவதாயில்லை. ஊதி ஊதி பெரிதாக்கி தான் வருகின்றனர்.

மீரா:
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே வெளியில் பிரச்சினைகளோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள் தான் வனிதாவும், மீராவும். அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்ததாக மீரா மீது போலீசில் புகார் உள்ளது. தற்போது அவருக்கு சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மீரா வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:
இதேபோல், தன்னுடைய மகளைக் கடத்தி சென்று விட்டதாக வனிதாவின் இரண்டாவது கணவரும் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், வனிதாவைக் கைது செய்ய நேற்று உதவியை நாடி இருக்கிறது ஆந்திர போலீஸ். இதனால் எந்நேரமும் பிக் பாஸ் வீட்டில் வைத்து வனிதா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியா, பரணி:
ஓவியா, பரணி:
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications