Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ்க்குள் அன்னைக்கு நடந்தது இதுதான்.. பிரதீப் வெளியேற்றம் குறித்த ரகசியத்தை உடைத்த தினேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை யோடு முடிவடைந்து இருந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பல சேனல்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்த பல நிகழ்வுகள் பற்றி பேசி இருந்தார். அதில் பிரதீப் உடைய வெளியேற்றம் குறித்தும் அந்த பேட்டியில் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட உண்மையான காரணம் பற்றியும் பிக் பாஸ் பிரதீப் வெளியேறிய பிறகு உள்ளே நடந்த நிகழ்வுகள் குறித்தும் தினேஷ் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பூர்ணிமா மாயா குரூப் பற்றியும் அந்த பேட்டியில் தினேஷ் பேசிஇருக்கிறார். என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றவர் தான் தினேஷ். இவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்து மூன்றாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றிருந்தார்.

 bigg boss 7 contestant Dinesh breaks the secret of Pradeeps eviction

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அனைவரும் அவருடைய குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் என்று எல்லோரோடும் சேர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிலர் பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர். அதுபோல தினேஷ் தன்னுடைய முதல் பேட்டியை கொடுத்திருக்கிறார்.

அதில் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது பிரதீப் பவரான போட்டியாளராக இருந்தார். உள்ளே இருந்த மற்ற போட்டியாளர்களோடு அவருடைய கேம் எந்த அளவுக்கு இருந்தது என்பது எனக்கு தெரிந்தது. நான் உள்ளே போனபோது கூட பிரதீப் என்னை பற்றி கூட அந்த பச்சை மண்டயனை முதலில் வெளியே தூக்கணும்னு சொல்லி இருக்கிறார். ஏன்னா அவருக்கு வைல்ட் கார்டு என்ரியாக உள்ளே போனதில் நான் போட்டியாளர் என்று தெரிந்திருக்கிறது.

அதனால் அவர் என்னை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தாரு. ஆனால் உள்ளிருக்கும் மற்ற போட்டியாளர்களோடு கம்பேர் பண்ணும்போது பிரதீப் ஒன்னும் அவ்வளவு மோசமானவர் கிடையாது. பிரதீப்பூம் சில தப்புகள் செய்திருக்கிறார். ஆனால் பிரதீப் வெளியே போன பிறகு உள்ளிருந்த எல்லோரும் சரியாக டிஸ்னரியில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை மட்டும் தான் பேசினார்கள் என்றால் கிடையாது.

உள்ளே பிரதீப் போன்றே பலர் இரட்டை அர்த்த வசனங்களில் பேசியவர்கள் இருக்க தான் செய்தார்கள். அதுபோல உள்ளே மாயா வேற மாதிரி மைண்ட் கேம் விளையாட கூடியவர். அதுபோல விசித்ராவும் நல்ல ஸ்ட்ராங்காக கேம் ஆட கூடியவர் தான். நான் உள்ளே போகும்போது பிரதீப்பும் மாயாவும் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்ட்ல வந்துட்டு இருந்தாங்க.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள எல்லாருக்குமே சின்ன கன்பியூசன் என்னவென்றால் இரண்டு பேரையும் நாமினேஷன் பண்ணாம ஒரு விஷயம் பண்ணனும் அப்படி என்று ஒரு விஷயம் போயிட்டு இருந்தது. நான் அப்ப கூட விசித்ரா மேம் கிட்ட சொன்னேன் நீங்க பிரதீப் மாயாவை நாமினேசன் பண்ணாதீங்க அது வேஸ்ட்னு. பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப், விசித்ரா, மாயா, பூர்ணிமா எல்லோரும் நல்ல கேம் பிளேயர்.

இந்த மாதிரி நல்ல கேம் விளையாட்றவங்க கூட இருந்தா தான் நம்மளும் நல்ல விளையாட முடியும் என்று எனக்கு தோணுச்சு. ஆனா பிரதீப் வெளியேற்றப்பட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் மைனசும் இருக்கும் பிளஸ்சும் இருக்கும். அது போல பிரதீப்க்கும் இருக்க தான் செய்தது. பிரதீப் ஒன்னும் அந்த அளவுக்கு மோசமான ஆளு கிடையாது. ஆனா அவர் இருந்தால் விளையாட்டுக்கு இடைஞ்சல் என்று சிலர் நினைத்திருப்பதால் தான் அவர் வெளியேற்றப்பட்டார்.

அதுபோல உள்ளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் உள்ளே எத்தனை கேமரா இருக்கிறது? எல்லோரையும் பிக் பாஸ் குரூப்பில் இருப்பவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் தினேஷ் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+