பிரதீப் பற்றிய கேள்விக்கு நேரடியாக பதில் அளித்த பூர்ணிமா.. இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன்பு பணப்பெட்டி டாஸ்க் இருந்த 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறி இருந்தார்.. வெளியே வந்ததும் பூர்ணிமா சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் பிரதீப் பற்றி பூர்ணிமாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு மொத்த பிரச்சனைகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பூர்ணிமா பதில் கொடுத்திருக்கிறார். அதிலும் சில தினங்களாக பிரதீப் சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக தாக்கி பதிவு வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் இப்போது பூர்ணிமாவின் அதிரடி பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அதே நேரத்தில் பூர்ணிமா தன்னைப் பற்றி ரசிகர்கள் திட்டி வரும் நிலையில் அதை கண்டு கொள்ளாமல் காலம் பதில் சொல்லும் என்கிற மாதிரி பதில் கொடுத்திருப்பது மலுப்பலாக இருப்பதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்... என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி மழுப்பல் தேவையா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. என்னதான் அப்படி நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி கட்டத்தில் வந்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுக்கும் கலவரங்களுக்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்து வந்தது. ஆரம்பமான முதல் நாளில் இருந்து தொடங்கிய சண்டைகள் இப்ப வரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறது.
அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சில வாரங்களில் பிரதீப் உடைய வெளியேற்றம் நடைபெற்றது. அது பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டது. இதனாலேயே இந்த நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளத்திலும் பலரும் விமர்சித்துக் கொண்டிருந்தனர். இந்த டைட்டில் வின்னராக பிரதீப் தான் வருவார் என்று சொல்லி வந்த நிலையில் அவருக்கு உள்ளிருந்த போட்டியாளர்கள் சிலர் ரெட் கார்டு கொடுத்திருந்தனர்.
பிரதீப்பால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சுமட்டப்பட்டது. இது குறித்து வெளியே வந்த பிரதீப் அடிக்கடி உள்ளிருக்கும் போட்டியாளர்களை குறித்து தாக்கி போஸ்ட் வெளியிட்டு வருவதும் பார்க்க முடியும். அதுவும் சில தினங்களுக்கும் முன்பு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாயுடன் வெளியே வந்த போது பிரதீப் பூர்ணிமா அம்மாவிடம் நான் செய்து கொடுத்த சத்தியத்திற்காக தான் அமைதியாக இருக்கிறேன்.
சில அல்லக்கைகள் பண்றதை பார்த்தா எரிச்சலா இருக்கு. நான் வாயை திறந்தால் பொழப்பு நாறிடும் என்று மறைமுகமாக தாக்கி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பூர்ணிமா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் ரசிகர் ஒருவர் இரண்டு நாட்களாகவே பிரதீப் பற்றியே கேள்வி தான் அதிகமாக இணையத்தில் எழுந்து வருகிறது.
அது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு பூர்ணிமா நான் இந்த விஷயத்தை பற்றி பேச விரும்பல. நான் எதற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாள் எல்லோருக்கும் என்னை பத்தி புரியும். அண்ணைக்கு மக்கள் எது சரின்னு புரிஞ்சுக்கு வாங்க என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அப்போ பிரதீப் மீதுதான் தப்பு என்று இன்னமும் பூர்ணிமா சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications