பிக் பாஸ் லைவில் அர்ச்சனாவிடம் ஜோவிகா செய்த மோசமான செயல்.. கூல் சுரேஷ் கேட்ட செம கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் முடிவடைய ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு எலிமினேஷன் ஆகின போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்திருக்கிறார்.
அப்போது எல்லோரிடமும் சகஜமாக சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்த ஜோவிகா அர்ச்சனாவிடம் மட்டும் செய்த செயலை பார்த்து அதிர்ந்து போன கூல் சுரேஷ் கேமரா முன்பு புலம்பி தீர்த்து இருக்கிறார்.
ஏற்கனவே வனிதா வெளியே அர்ச்சனாவிற்கு எதிராக தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் போன ஜோவிகாவும் தன்னுடைய வன்மத்தை அர்ச்சனா முன்பு காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் திட்டி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்னும் இரண்டு நாட்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதிப்போட்டியாளராக ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றனர். அதுபோல ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் இன்று மூன்றாவது நாளாக உள்ளே போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கும் போது காலையில் கானா பாலா வந்திருந்தார். அவரை தொடர்ந்து பூர்ணிமா மீண்டும் வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இப்போது லைவில் ஜோவிகா என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது கிச்சனுக்கு பக்கத்தில் இருக்கும் ஷோரூம் வழியாக உள்ளே வருகிறார்.
வரும்போது அவருக்கு எந்த பெரிய அளவில் வரவேற்பும் கொடுக்கப்படவில்லை. சாதாரணமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஜோவிகாவை பார்த்ததும் போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தது போல நாடகமாடி கொண்டிருந்தனர். அதுவும் பார்த்து பல வருடமானது போல விக்ரம், பூர்ணிமா, அனன்யா, அக்ஷயா என்று எல்லோரும் குதுகளித்ததை பார்க்கும் ரசிகர்களுக்கு ஏன் இந்த நடிப்பு..? என்றுதான் தோன்றி இருக்கும்.
உண்மையில் இவர்கள் நேற்று வரைக்கும் ஒன்றாக தானே வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது பார்க்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் உள்ளே ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்று தெரியவில்லை. ஜோவிகா உள்ளே வந்ததும் எமோஷனல் காட்சிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் எல்லோரிடமும் ஓடிப்போய் பேசிக் கொண்டிருந்த ஜோவிகா அர்ச்சனாவை மட்டும் கண்டும் காணாதது போல கடந்து சென்று கொண்டிருக்கிறார்.
அப்போது வாசலின் பக்கத்திலேயே அர்ச்சனா நின்று கொண்டு ஜோவிகாவை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அதற்கு லேசாக புண்முறுவல் செய்த படியே ஜோவிகா கடந்து போயிருக்கிறார். அதனால் அர்ச்சனாவின் முகம் வாடி போய் இருக்கிறது. அதை கவனித்த கூல் சுரேஷ் கேமரா முன்னாடி அர்ச்சனாவை கூட்டிட்டு போய் ஏன் இங்க வரவங்க எல்லாரும் இப்படி பண்றாங்கன்னு தெரியல.
இந்த விளையாட்டு முடிய இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு ஆனா யாருமே இந்தவிளையாட்டை விட்டு இன்னும் வெளியே வரல. நிகழ்ச்சி முடிய இரண்டு நாள் தான் இருக்கு ஆனாலும் எதுக்கு இப்படி வன்மத்தை கக்குறாங்கன்னு தெரியலையே என்று புலம்பி கொண்டு இருந்த கூல் சுரேஷ் கூடவே தன்னுடைய வழக்கமான தத்துவத்தை உதித்திருந்தார். அதாவது நான் எப்போதும் சொல்றதுதான் இந்த பிக்பாஸ் மட்டும்தான் வாழ்க்கை இல்லை. இதுக்கு வெளியே தான் வாழ்க்கையே இருக்கு.
நம்ம நிறைய நல்ல மனங்களை சம்பாதிக்கணும் அது வெளியே நடக்கணும்னா இங்க நம்மளுடைய நடவடிக்கை நல்லா இருக்கணும் ஆனால் உள்ளே சிலர் செய்கிற செயல்தான் பார்க்க கடுப்பா இருக்கு என்று புலம்பி கொண்டு இருந்தார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த எல்லா போட்டியாளர்களுமே அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இதை பார்க்கும் போது அவர்கள் அர்ச்சனாவை பழி வாங்குகிறோம் என்று நினைக்கிறார்கள் ஆனால் மீண்டும் இவர்கள் அர்ச்சனாவிற்கு மக்களின் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லையோ? என்னவோ... தெரியவில்லை. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications