விசித்ராவிற்காக போன் பண்ணி மிரட்டிய பிரபலம்! அண்ட காகசம் செட்டில் நடந்தது இதுதான்.. தினேஷ் எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தினேஷ் விஜய் டிவியில் அண்டகாகசம் என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கும் விசித்திராவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதிலும் தினேஷ் விசித்திராவை கிண்டல் செய்ததால் தான் அவர் அண்டகாசம் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டார் என்று சில செய்திகள் கூறப்பட்ட நிலை அதை தினேஷ் மறுத்திருக்கிறார்.
அதோடு அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை பற்றி வெளிப்படையாகவும் தினேஷ் பேசி இருக்கிறார். அப்போது விசித்திராவிற்காக தன்னை ஒரு நபர் போன் பண்ணி மிரட்டியதாகவும் தினேஷ் கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தான் போட்டியாளர்கள் சண்டை போட்டு இரண்டு அணியாக பிரிந்து இருந்தனர் என்று பார்த்தால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இவர்களுக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகளும் கொஞ்சம் கூட குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதில் போட்டியாளராக இருந்த தினேஷ், விஷ்ணு, மணி, விசித்ரா ரவீனா, அக்ஷயா மற்றும் அனன்யா போன்றோர் விஜய் டிவியில் அண்டகாசம் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அப்போது விசித்திரா மற்றும் தினேஷுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் விசித்திரா நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறி விட்டார் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. அது குறித்து முதல்முறையாக தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது தான் என்னை பற்றி எல்லோரும் நான் பெண்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறேன், பெண்களை மதிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு கூட எனக்கு எதிராக சதி சுற்றி கொண்டிருக்கிறார்களே இதற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அதாங்க அந்த அண்டகாகசம் சூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயம் முழுமையாக தெரியாமல் சிலர் வதந்தி பரப்புறாங்க. நாங்க சூட்டிங் போயிருந்தோம் அதில் நான் விஷ்ணு மணி மூன்று பெரும் ஒரு அணியாகவும் பெண்கள் அக்ஷயா, அனன்யா, ரவீனா, விசித்திரா எல்லோரும் ஒரு அணியாகவும் இருப்பது போன்று சொல்லி இருந்தார்கள்.
நாங்களும் சரி என்று சொல்லி இருந்தோம். ஆனால் சிறிது நேரம் கழித்து திடீரென்று ப்ரொடக்ஷன் டீமில் இருந்து சிலர் என்னிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னாங்க. நானும் என்னவென்று கேட்ட போது விசித்ரா மேடம், நீங்க, விஷ்ணு மூன்று பேரும் ஒரு அணியாக இருக்கணும்னு சொல்றாங்க என்று சொன்னாங்க.
அதற்கு நான் அது முடியாது ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் என்னுடைய பர்சனல் பற்றி பேசி இருக்கிறார். நான் இப்போ அவரோடு சேர்ந்து விளையாடினால் நல்லா இருக்காது என்னுடைய ரசிகர்களும், உறவினர்களும் கூட அதை விரும்ப மாட்டாங்க என்று தோன்றியதால் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அதற்கு விசித்திரா இல்லை நான் கண்டிப்பாக தினேஷ் மற்றும் விஷ்ணுவோடு தான் விளையாடுவேன் என்று உறுதியாக சொன்னதாக அந்த ஆட்கள் என்னிடம் சொன்னார்கள்.
அதற்கு நான் மறுத்து விட்டதால் விஷ்ணு என்னுடைய அணியில் இல்லை என்றாலும் பரவாயில்லை தினேஷ் கண்டிப்பாக என்னுடைய அணியில் இருக்க வேண்டும் என்று மீண்டும் விசித்திரா சொன்னதாக அவர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டதால் திடீரென்று ஒருவர் போன் கொண்டு வந்து உங்களிடம் ஒருவர் பேசணும் என்று சொன்னார்.
நானும் யார் என்று கேட்டேன் அவர் நான் ஒரு முக்கியமான ஆள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விசித்திரா சீனியர் நடிகையாக இருக்கிறார். அவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க மாட்டீர்களா? சீனியர் கேட்கிறதை நீங்கள் செய்ய மாட்டீங்களா என்று என்னை மிரட்டுற மாதிரி பேசினார். நான் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டேன். அதனால் விசித்திரா போன் பேசிய படியே வெளியே சேரை போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் இருந்தார்.
அதற்கு பிறகு கிளம்பி போய்விட்டார் இதுதான் நடந்தது, எனக்கு பிடிக்கவில்லை என்றால் விட வேண்டியது தானே? அதற்கு இல்லை நீ இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரும் ஒரே வீட்டிற்குள் இருந்தோம். அது வேற கதை இப்போ வெளியே வந்தாச்சு, இங்கே ஜாலியா ஒரு நிகழ்ச்சியை அட்டென்ட் பண்ணனும்னு வந்தோம்.
அந்த இடத்தில் எதற்காக இப்படி பண்ணனும் அப்படியும் நாங்க சொல்றோம் கண்டிப்பா விசித்ராவை பற்றி நாங்கள் எந்த வார்த்தையும் சொல்லவே மாட்டோம் என்று ஆனாலும் அவருக்கு நான் அவருடைய அணியில் விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுதான் அந்த செட்டில் நடந்தது என்று சமீபத்தில் பேட்டியில் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications