ரச்சிதா தான் எங்க கிட்ட வந்து பேசுச்சி..பிரிவுக்கு காரணமே இவங்கதான்..போட்டு உடைத்த தினேஷின் பெற்றோர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தினேஷ் அவருடைய மனைவியோடு தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ரச்சிதா தான் இனி தினேஷோடு சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்று சொல்லும் விதமாக அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் ரச்சிதா முதலில் தங்களிடம் பேசியது பற்றியும் இப்போது அவர் கோர்ட்டுக்கு சென்றிருப்பதைப் பற்றியும் பிரபல செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் சின்னத்திரையில் ஒரு சில நடிகர்,நடிகைகள் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர். அவர்களில் பிரபலமானவர்கள் தான் தினேஷ் மற்றும் ரச்சிதா இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் காதலித்து திருமணம் செய்திருந்தனர்.
ஆனால் இப்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் தினேஷ் நாங்கள் சின்ன மன வருத்தத்தில் தான் இருக்கிறோம் இருவரும் பேசினால் அது தீர்ந்துவிடும் என்று கூறிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் டைட்டில் ஜெயித்ததும் அதை ரச்சிதாவிடம் கொடுப்பேன் என்று உறுதியாக கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரச்சிதா தொடர்ச்சியாக தினேஷுக்கு எதிராகவே சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிட்டு வருகிறார்.
நேற்றைய தினம் கூட தினேஷை பிக்பாஸ் வீட்டிற்குள் எதிர்த்து கொண்டு இருக்கும் விசித்திராவை ஆதரித்து பதிவு வெளியிட்டிருந்தார் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் கலந்துகொண்டு வெளியே வந்த தினேஷனுடைய அப்பாவும் அம்மாவும் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றனர்.
அதில் ரச்சிதா பற்றி பல தகவல்களை பேசி இருக்கின்றனர். எங்க பையன் காதலிச்சா கூட என்னுடைய அப்பா அம்மா சம்மதத்தோடு தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்லி இருக்கார். அதனால அந்த பொண்ணு எங்ககிட்ட வந்து பேசுச்சு. நாங்களும் பையனோட சந்தோஷம்தான் முக்கியம்னு நெனச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னோம்.
எட்டு வருஷம் நல்லபடியா தான் வாழ்ந்தாங்க. ஆனால் இப்போ சிலருடைய தவறான வழிகாட்டுதலால் தான் என்னுடைய பையன் வாழ்க்கை நடுத்தெருவுல நிக்குது. சரி செய்ய எவ்வளவோ நாங்க முயற்சி செய்தோம். இரண்டு வீட்டில் இருந்தும் பெரியவங்க பேசிப் பார்த்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் நடக்கல. இறங்கி வரதா இருந்தா இரண்டு தரப்பில் இருந்தும் இருக்கணும். ஆனா ஒரு தரப்பு மட்டுமே சமாதானத்துக்கு தயாராக இருந்தா அதுல நல்ல தீர்வு எப்படி கிடைக்கும்.
அந்த பொண்ணு பிடிவாதமா இருக்கு. நாங்க வேற என்ன செய்ய முடியும். எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு. விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான். என் பையன் கிட்ட நாங்க உனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் சென்னையில் இரு, வாய்ப்பு இல்லன்னா சொந்த ஊருக்கு வந்துடுன்னு சொல்லிட்டோம். வீடு, தொட்டோம்னு எங்களால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறோம்.
அதை பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். யார் யாருக்கு என்ன அமைப்புன்னு இருக்குதோ அதன்படி தான் நடக்கணும். என் பையன் ரச்சிதா கூட சேர்ந்து தான் வாழனும்னு ஆசைப்பட்டான். ஆனா பிரிஞ்சி தான் போகணும்னு அந்த பொண்ணு பிடிவாதமா இருந்தாங்க. அதனால ஒரு கட்டத்தில் உன் விருப்பம் நீதிமன்றத்திற்கு நீங்களே போயிடுங்க நான் விவாகரத்து தந்துடுறேன்னு சொல்லிட்டான். இந்த மாத கடைசியில் வழக்கு விசாரணைக்கு வருது.
என்ன சொல்றாங்கன்னு தெரியல. பிரியது தான் தீர்வு என்று உறுதியா இருந்தாங்கன்னா அதுக்கு பிறகு நாம கெஞ்சிட்டு இருக்கிறதுல அர்த்தம் இல்லையே, எங்க இருந்தாலும் சந்தோஷமா வாழட்டும் என்று அந்த பேட்டியில் விரத்தியோடு தினேஷின் அப்பா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் இறந்துவிட்டேன். நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவே என் வாழ்க்கையை நான் விரும்பும் வழியில் வாழ விடுங்கள் என்று அதில் கூறியிருக்கிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications