பிரதீப் பற்றி நாங்க அப்படி சொல்லல.. உள்ளே நடந்தது இதுதான்.. விஜய் டிவி, கமல் மீது பழியை போட்ட நிக்சன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு பிறகு பிரதீப் முதல் முறையாக இன்டர்வியூ கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நாங்கள் பிரதீப் மீது அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை சொல்லவே இல்லை என்று நிக்சன் கூறி இருக்கிறார்.
அதோடு நிக்சன் பிரதீப் பற்றி நாங்கள் உரிமை குரல் தூக்கி சொன்ன காரணங்களுக்காக மட்டும் அவருக்கு ரெட் காடு கொடுக்கவில்லை. உள்ளே மேலும் சில செயல்கள் நடைபெற்றது. அதற்காகத்தான் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இது விஜய் டிவி மற்றும் கமல்ஹாசன் நடித்த முடிவுதான் என்று அந்த பேட்டியில் நிக்சன் கூறி இருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு மட்டும் இணையத்தில் இன்னும் குறைந்த பாடு இல்லை. இந்த சீசனில் பிரதீப்புடையை வெளியேற்றம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போதும் பல பிரபலங்களும் ரசிகர்களும் பிரதீப் வெளியேற்றப்பட்டது தவறு என்று கூறி வருகின்றனர். அதோடு பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு காரணத்தை கூறி அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தனர்.
இதற்கு முக்கிய காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சிலர் பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் தூக்கி பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்துதான் விஜய் டிவி மற்றும் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருந்தனர். ஆனால் இப்பொழுது பிரதீப் மீது உரிமைகுரல் தூக்கி குற்றச்சாட்டு வைத்த நிக்சன் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் நாங்கள் எந்த இடத்திலுமே பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லவில்லை. காரணம் அங்கே அத்தனை கேமரா இருக்கிறது. ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்யும் செயல்தான் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம். உள்ளே இருந்த பல போட்டியாளர்கள் பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் தூக்கி விட்டு வெளியே வந்து பிரதீப் ரொம்ப நல்லவர் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களைப் போல மாற்றிப் பேசக்கூடிய ஆள் கிடையாது. அந்த மாதிரி மாற்றி பேசுறவங்களோடு ஒப்பிடும்போது அதற்கு பிரதீப் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. பிரதீப் எதுவாயிருந்தாலும் நான் இப்படிதான் என்று தைரியமாக பேசி விடுவார். ஆனால் உள்ளே சிலர் ஒரு பேச்சு பேசி விட்டு வெளியே வந்தது வேறு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளே இருந்த விஷ்ணு கூட பிரதீப் தூங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கமல் சார் முன்பு பேசி இருந்தார். ஆனால் வெளியே வந்து அவரே மாற்றி பேசுகிறார். அதுபோல நான் பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் தூக்குவதற்கு காரணம் அவர் தான் என்ன தப்பு செய்தாலும் நான் இப்படித்தான் என்று அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர மாறுவேன் என்று அவர் சொல்லவே இல்லை.
அது போல தான் கமல் சார் முன்பு கூட பாத்ரூம் கதவு திறந்து வைத்து போனது குறித்து கேள்வி கேட்டபோது சாரிடமும் நான் அப்படித்தான், அதனால் இங்கேயும் அப்படியே இருப்பேன் என்று பேசினார். அதனால் தான் கமல் சாருக்கும் கோபம் வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் உள்ளே போய் விஜய் டிவி தரப்பினர்களிடம் பேசி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை கேமராவில் பார்த்திருக்கிறார்.
பிறகு வந்து நான் எடுத்த முடிவை தான் பிக் பாஸ் தரப்பினர்களும் எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார், என்று தங்கள் மீது தப்பில்லை என்பது போல நிக்சன் பேசியிருக்கும வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications