மனைவி பற்றி பிரதீப்பிடம் தினேஷ் சொன்ன வார்த்தை..வெளியே ரச்சிதா வெளியிட்ட வீடியோ.. குவியும் கேள்விகள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ரியாக நடிகர் தினேஷ் கலந்து கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய மனைவி குறித்து சில தகவல்களை பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ் மற்றும் அவருடைய மனைவி நடிகை ரச்சிதாவும் சமீபகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோக்களை வைத்து சோகமான போஸ்ட் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் கடந்த சீசனில் ரச்சிதா மகாலட்சுமியும் பல வருடங்களாக முயற்சி செய்து கடந்த சீசனில் கலந்து கொண்டு இருந்தார். அதோடு டைட்டில் வின்னராக வரவேண்டும் என்று ஆசையோடு காத்திருந்த ரச்சிதாவிற்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி கிடைத்தது.
கடைசி ஒரு வாரத்திற்கு முன்பு எலிமினேஷனால் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் ரச்சிதாவின் கணவரான தினேஷ் ரச்சிதா கடந்த சீசனில் தன்னுடைய சப்போர்ட்டை கொடுத்துக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கருத்து வேறுபாடால் பிரிந்து இருந்த இவர்கள் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதுதான் மிச்சம். தனக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து திட்டுகிறார், அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்கிறார் என்று ரச்சிதா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அதற்கு தினேஷ் தன் தரப்பு விளக்கங்களை கொடுத்திருந்தார்.
இப்படியாக இருக்கும் நிலையில் இவர்கள் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தினேஷ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. ஏற்கனவே கடந்த சீசனில் ரச்சிதா இருக்கும்போது தினேஷ் வைல்ட் கார்ட் என்டிரியாக உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசியில் அது நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த சீசனின் ஆரம்பத்தில் இவர் அறிமுகமாகவில்லை அது குறித்து பேட்டியில் கூட என்னிடம் பிக்பாஸிலிருந்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதனால் நான் பிக் பாஸ் போகிற மாதிரி இல்லை என்றும் தினேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ் அறிமுகமாகி இருக்கிறார். உள்ளே வந்ததுமே அவருடைய விளையாட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று 24 மணி நேர எபிசோடில் தினேஷும் பிரதீப்பும் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றனர்.

இருந்திருக்கின்றனர். அப்போது பிரதீப் நீங்க இதற்கு முன்பு உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் பார்த்திருக்கீங்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு தினேஷ் இல்லை நான் கடந்த சீசன் மட்டும் தான் பார்த்தேன். ஏனென்றால் அந்த சீசனில் என்னுடைய மிஸ்ஸஸ் இருந்தாங்க அதனால அவங்களுக்காக பார்த்தேன் என்று தினேஷ் கூறியிருக்கிறார்.
அதுபோல ஏற்கனவே எனக்கு பிடிச்சவங்களுக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்ப புடிச்சதால நான் இந்த டைட்டில் வின்னர் ஆகி அவருக்கு இதை சமர்ப்பிப்பேன் என்று ஏற்கனவே தினேஷ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "தனிமை தான் அவளிடம் அடிமையாகி விட்டது. நீ எப்போதும் நீங்களாகவே இருக்க முடியும் "என்று கேப்ஷன் கொடுத்து தன்னுடைய வீடியோக்களை எடிட் செய்து போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரச்சிதாவிற்கு பலர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications