சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்பட்ட நிலை.. அப்போ வழக்கறிஞர் இப்போ கானா பாலா.. வளர்ச்சினா இப்படி இருக்கணும்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கானா பாலா அறிமுகமானார்.
இவர் ஒரு பாடகராக தான் பலருக்கும் தெரியும். ஆனால் பல வருடங்களாக பிரபல வழக்கறிஞராக இருந்து வருகிறாராம்.

தன்னுடைய வீட்டிலே சிறுவயதில் இவருக்கு பல அவமானங்கள் நடைபெற்ற போதிலும் அடுத்தடுத்து பல பட்டங்களை பெற்று வழக்கறிஞராக இருந்த நிலையில் தற்போது அந்த வேலையை தான் எதனால் விட்டேன் என்பது பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.
அந்த வகையில் இதுவரைக்கும் கானா பாடகர் ஆகவும் ஒரு நடிகராகவும் பலருக்கும் பரிட்சயமான கானா பாலா இப்போது முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய பாட்டு திறமையின் மூலமாகவே ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சீசனில் இப்போது இருக்கும் நிலைமையில் இவர்தான் மூத்த போட்டியாளராக இருக்கிறார்.
எத்தனை இளம் போட்டியாளர்களோடும் தன்னால் போட்டியிட முடியும் என்று தைரியமாக இவர் களம் இறங்கி இருக்கும் நிலையில் அதை பலரும் பாராட்டி வருகின்றனர். பிரபல எழுத்தாளராக இருக்கும் பவா செல்லதுரை தன்னால் ஒரு வாரம் கூட இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை என்று வெளியேறி இருந்தார்.
அதை பார்த்த பிறகும் கானா பாலா தைரியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இவர் யார் எப்படி இவ்வளவு பிரபலமானார் என்பது பற்றி அவரே பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தன்னுடைய பெயர் கானா பாலா என்று பலரும் பிரபலம் ஆகி இருக்கிறது. ஆனால் என்னுடைய உண்மையான பெயர் பால முருகன் என்பதுதான் என்று கூறி இருக்கிறார்.
அதோடு கானா குயில் பாலா என்றும் இவரை பலர் அழைப்படுவார்களா? இவர் கல்லூரி படிக்கும் போது பல பாடல்களை படித்துக் கொண்டிருப்பாராம். படித்து முடித்துவிட்டு தான் வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார். இவர் மதுரையில் பிரபல கல்லூரியில் வழக்கறிஞராக படித்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாட்டு திறமையால் பலரை மிரள வைத்திருக்கிறார்.
ஆனால் இப்போது இருக்கிற மாதிரி நிலைமை எல்லாம் அப்போது கிடையாதாம். அப்போது கானா பாட்டு பாடுபவர்கள் அதிகமாக இறந்த வீட்டில் தான் இவர் பாடியிருப்பதால் தினமும் இறந்த வீடுகளுக்கு போய் விட்டு வருவதால் இவரை வீட்டில் உள்ளே விடுவதற்கே கூட யோசிப்பார்களாம் ஆனாலும் அந்த நேரத்தில் இவருக்கு சம்பளம் எல்லாம் குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு இவர் வழக்கறிஞராக இருந்திருக்கிறார். அப்போது ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை இவர் சம்பதித்துக் கொண்டிருந்தாராம் இப்படியே பல வருடங்கள் போயிருந்த நிலையில் இன்னொரு பக்கத்தில் இவர் கானா நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் இறந்த வீடுகளுக்கு மட்டுமே பாட்டு பாடி வந்த இவர் பல பேருடைய முயற்சிக்கு பிறகு தான் ஒரு சில திருமண நிகழ்ச்சிகள் பங்க்ஷனில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அந்த நிகழ்ச்சிகளில் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இவர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். அப்போதுதான் இவருக்கு சினிமாவிலும் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை தொடர்ந்து இவர் கானா கலை நிகழ்ச்சிகளை நடத்தும் குழுவில் தலைமை பொறுப்பிலும் இருந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கான வரவு செலவு கணக்குகள் எல்லாம் இவர்தான் பார்ப்பாராம்.
ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும் பாடகராகவும் இரண்டு பக்கத்திலும் வேலையை இவரால் பார்க்க முடியாமல் தான் வழக்கறிஞர் தொழிலை விட்டு வந்திருக்கிறார். சினிமாவில் ஒரு படத்திற்கு இவருக்கு குறைந்தது ஒரு லட்சம் வரைக்கும் சம்பளம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தனக்காக சேமித்து வைத்ததே கிடையாது என்றும் அவசர செலவுக்கு மட்டும் பத்தாயிரம் வங்கி கணக்கில் எப்போதும் இருக்கும்.
ஆனா நான் பர்ஸ் கூட பயன்படுத்துவது கிடையாது. இப்போது என் பாக்கெட்டில் கர்ச்சிப் மட்டும்தான் இருக்கும். பணத்தைவிட திறமை தான் பெருசு என்று அந்த பேட்டியில் பாலா பேசி இருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதற்கு காரணம் என்னுடைய திறமை, என்னுடைய ஆளுமை, என்னுடைய கேரக்டர் எல்லாமே என்னுடைய குடும்பத்திற்கும் என்னை சார்ந்த ஒரு சிலருக்கு தான் தெரியும்.
ஆனால் நான் யார் என்பதை ரசிகர்கள் பலருக்கும் தெரியவேண்டும் என்றுதான் இந்த நிகழ்ச்சியில் நான் தைரியமாக களமிறங்கி இருக்கிறேன் என்று கானா பாலா பேசியிருக்கிறார். அதோடு கானா பாலா அட்டகத்தி என்ற திரைப்படத்தில் ஒரு நடுக்கடலில் என்ற பாடலும் ஆடிப் போனா ஆவணி என்ற பாடலின் மூலம் தான் மக்களின் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார். அதோடு சமீபத்தில் நடந்த கவுன்சிலர் தேர்தலுக்கான எலக்ஷனில் இவர் போட்டியிட்டு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அந்த நேரத்தில் இல்லாமல் இருந்ததும் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவர் எத்தனை நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். முதல் நாளே உள்ளிருக்கும் போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை டார்கெட் செய்து தாக்கி வருகின்றனர். இன்று எல்லா வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் கானா பாலா உள்ளே எத்தனை நாள் தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அது போல அவருடைய பாடல்களில் உங்களுக்கு என்ன பாட்டு ரொம்ப பிடிக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications