யார் இந்த ஆர்.ஜே பிராவோ.. வால்பாறை பையன் துபாய் ரிட்டன்..அப்பாவின் இறப்பு..போன்காலில் மாறிய வாழ்க்கை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர்.
அதில் ஆர்.ஜே பிராவோ ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் அவர் யார் என்பது பற்றி இணையத்தில் அதிகமானோர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் அவர் தன்னைப் பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சண்டை சச்சரவுகளோடும், காதல் கண்டண்டுகளோடும், ரொமான்ஸ்க்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீசன் இருந்து வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்த நிலையில் ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர் இந்த நிலையில் நேற்றைய தினம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்களை பார்த்து ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்கள் ராகிங் செய்வது போல டார்கெட் செய்து புது போட்டியாளர்களை இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி தங்களுடைய வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றனர்.
இதில் தினேஷ், அன்னபாரதி, ஆர்.ஜே பிராவோ, விஜே அர்ச்சனா, கானா பாலா என ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் ஆக வந்து இருக்கின்றனர். இதில் ஆர் ஜே பிராவோ தவிர மீதம் இருக்கும் போட்டியாளர்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர்கள் தான். இதனால் யார் இந்த ஆர்.ஜே பிராவோ என்பது பற்றி இணையத்தில் பலர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர் பேசிய சில தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஆர் ஜே பிராவோ இப்போது துபாயில் உள்ள ஒரு தமிழ் ரேடியோ சேனல் ஒன்றில் ஆர் ஜே வாக வேலை செய்து வருகிறார். ஆனால் இவருடைய சொந்த ஊர் வால்பாறை தானாம். இவருடைய அக்கா அம்மா எல்லாம் இப்பொழுது கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இவர் ஸ்கூல் படிக்கும்போதே நாம எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு தான் இருந்திருக்கிறார். அப்போது இவருக்குள் நமக்கு என்ன தெரியும் என்பது பற்றிய தேடல் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் நமக்கு பேசுவது தான் நன்றாக வரும் அதனால் ஒரு தொகுப்பாளராக மாறலாம் என்று ஸ்கூல் காலேஜ் event-களை எல்லாம் இவரே எடுத்து நடத்தி வருவாராம்.
அதோடு அப்போதே சில பிறந்தநாள் பங்க்ஷன் முதல் கல்யாண வீடு பங்க்ஷன் வரைக்கும் சில நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பாராம். இப்படியாக இவருடைய வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் இவருடைய அப்பாவின் மரணம் ஏற்பட்டிருக்கிறது. அப்பாவின் மரணத்தால் வீட்டில் கஷ்டம் ஏற்பட அதைத் தொடர்ந்து இவர் கூடுதலாக தான் வேலைவாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.
அப்போது சென்னையில் ஒரு சில டிவி சேனல்களில் இவருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை கிடைத்திருக்கிறது. அப்போது 1500 ரூபாய் சம்பளம் கிடைக்குமாம். அதற்காக தன்னுடைய ஊரில் இருந்து 500 ரூபாய் செலவு செய்து சென்னை வந்து சென்னையில் 500 ரூபாய் செலவோடு நிகழ்ச்சியையும் நடத்தி முடித்துவிட்டு மீண்டும் 500 ரூபாய் செலவழித்து தன் ஊருக்கு போய் விடுவாராம்.
கையில் பணம் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதற்காக தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது தான் ஒரு நாள் துபாயிலிருந்து இவருக்கு போன் செய்திருக்கின்றனர். அப்போது உங்களுடைய நிகழ்ச்சியை நாங்கள் பார்த்திருக்கிறோம் .நாங்கள் துபாயில் தமிழ் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறோம். நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள்.
உடனே இவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையாம். கிளம்பி போய்விட்டாராம். இப்படித்தான் என்னுடைய வாழ்க்கை மாறியது வால்பாறை பையன் இப்போது துபாய் ரிட்டனாக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களை பார்க்கும்போது எனக்கு பெரியதாக பயமோ வித்தியாசமோ தெரியவில்லை.

ஆனால் நம்முடைய நண்பர்கள் உறவினர்களில் பல பேர் இப்படிப்பட்ட குணங்களில் தான் இருக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து கொண்டு வருகிறோம் நாமும் சில நேரங்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்களோ அதுபோல தானே ஒவ்வொரு இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறோம். அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டு இதில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அத்தோடு வந்ததும் ஐசுவோடு பிராவோ பேசியது குறித்தும் பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் வந்ததுமே எல்லோருக்கும் ரோஸ் கொடுத்து ஐஸ் வைத்து பார்த்தார். ஆனால் இன்று பழைய போட்டியாளர்கள் இவரையும் சேர்த்துதான் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இவர்களுடைய பெயரும் இருக்கிறது. இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் எத்தனை நாட்கள் தொடர போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே போல தமிழ் ரசிகர்களின் மனதில் எந்த அளவிற்கு கவர போகிறார் என்பதையும் பார்ப்போம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications