பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடித்த நடிகை ஷகிலா.. வெளியான புகைப்படம்.. ரசிகர்களின் “அந்த” கேள்வி
சென்னை: சமீபத்தில் தான் பிக் பாஸ் 7 தெலுங்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் நடிகை ஷகிலாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் 7 தெலுங்கு நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 14 பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் அதிகமான தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக நடிகை ஷகிலா தான் இருந்து வருகிறார். அதே நேரத்தில் இந்த சீசனில் நடிகை கிரணும் முக்கிய போட்டிகளாக அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவர் கடந்த வரம் எலிமினேஷன் ஆகி வெளியேறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒவ்வொரு மொழியிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழைப் போலவே தெலுங்கிலும் ஏழாவது சீசன் சமீபத்தில் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழில் இப்போது 7வது சீசன் தொடங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா ஒரு போட்டியாளராக கலந்து கொள்வார் என்று பலர் கருத்து கூறி வந்தனர். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஷகிலா தெலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். அவரோடு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை கிரண் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் கடந்த வாரமே எலிமினேஷன் ஆகி வெளியே வந்துவிட்டார்.
இதன் நிலையில் கிரண் வெளியே வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் டென்ஷனாக இருந்த நடிகை ஷகிலா அங்கு சிகரெட் வைத்து புகை பிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே youtube சேனல் மூலமாக பலரையும் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் ஷகிலா பலரிடமும் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று கிளாஸ் எடுத்துக் கொண்டு ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் புகைப்பிடித்துக் கொண்டிருப்பது மட்டும் நியாயமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உபதேசம் என்பது ஊருக்கு மட்டும் தானா? என்பது ஷகீலா விஷயத்தில் அதிகமான ரசிகர்கள் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் youtuber திவ்யா கள்ளச்சி, ரவுடி பேபி சூர்யா, அதுபோல சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் என பல பிரபலங்களையும் அடுத்தடுத்து பேட்டி எடுத்துக் கொண்டு அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கிளாஸ் எடுத்த நிலையில் இப்போது நீங்கள் மட்டும் இந்த மாதிரி செய்யலாமா? என்பதுதான் பலருடைய கேள்வி.
அதே நேரத்தில் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் ஷகிலா உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் நன்றாகவே செட்டாகி விட்டார். அந்த நிகழ்ச்சியில் வயதில் அதிகமானவர் ஷகிலா தான் என்பதால் அவரால் இளம் தலைமுறையுடன் போட்டி போட முடியுமா? என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஷகிலா உள்ளே காமெடியாகவும் எளிமையாகவும் நடந்து கொள்வதை பார்த்து அந்த நிகழ்ச்சியில் பலரும் அவரை அம்மா என்று அழைத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்களிலே ஷகிலாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் கிரண் வெளியே போய்விட்டார் என்பதற்காக புகை பிடித்துக் கொண்டு இருக்கிறார். இது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications