நடிகையுடன் லிவ் இன் ரிலேஷன்! கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்த நடிகர்! பிக்பாஸ் செல்லும் அவர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியலில் நடித்த ஒரு நடிகையுடன் 5 ஆண்டுகள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது அவரை எட்டி உதைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறப்பட்ட நடிகர் ஒருவர், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்குள் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அவர் , எப்படி விளையாட போகிறார் என்பதை பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8 8

தயாரிப்பாளரும் மகாலட்சுமியின் கணவருமா ரவீந்திரன் சந்திரசேகர், மகாராஜாவில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி, சுனிதா, நடிகர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், அருண் பிரசாத், அன்ஷிதா, ஆர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகிய 18 பேர் கலந்து கொள்கின்றனர்.

ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டில் கோடு போடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியில் தனித்தனி கட்டில்களும், மற்றொரு பகுதியில் ஒரே படுக்கையில் 3 பேர் படுக்கக் கூடிய அளவிற்கான கட்டில்களும் போடப்பட்டுள்ளன. இதில் போட்டியாளர்கள் எதை தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட கோட்டை போல் வீடே இரண்டாகுமா என தெரியவில்லை. பிக்பாஸில் அர்னவ் என்பவர் போட்டியாளராக வந்துள்ளார். இவர் சீரியல் நடிகர்,. மகராசி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த கன்னட நடிகை திவ்யா ஸ்ரீதருடன் அர்னவ் நடித்திருந்தார்.

அப்போது இருவரும் சீரியலில் நடிக்கும் போது காதலித்து 5 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்தனர். இதையடுத்து அர்னவை திருமணம் செய்து கொண்டதாக ஸ்ரீதிவ்யா சமூகவலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார். அர்னவ், செல்லம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது.

தன்னை திருமணம் செய்து கொண்டு மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக திவ்யா குற்றம்சாட்டினார். அது போல் தன்னை அர்னவ் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார் என திவ்யா தெரிவித்தார். மேலும் அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது தன்னை எட்டி உதைத்து, அடித்து சித்ரவதை செய்ததால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அர்னவ் திடீரென தலைமறைவாக இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே கர்ப்பமாக இருந்த திவ்யாவுக்கு சீரியலில் நடித்த கலைஞர்களே 5 ஆவது மாதம் பூமுடித்து வைத்தனர். பிறகு 9ஆவது மாதம் சீமந்தமும் நடந்தது. இதையடுத்து திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை கூட பார்ப்பதற்கு அர்னவ் வரவில்லை. இதுவரை அர்னவ், திவ்யாவுடன் சேரவில்லை. இந்த நிலையில்தான் அர்னவ் பிக்பாஸுக்குள் போட்டியாளராக சென்றுள்ளார். அங்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+