பாவனி பிரச்சனையால் அபிநய் மனைவி எடுத்த முடிவு..இதுதான் தற்போதைய பிரச்சனை விரக்தியில் அபிநய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அபிநய் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அபிநய் மனைவி விவாகரத்து செய்து விட்டாரா என்ற கேள்விக்கு அபிநய் கூறிய பதில் அபிநயின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான அபிநய் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் என்பது நாட்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு பின்பு வெளியேறி இருந்தார். அபினை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால் அது அவருடைய கேரக்டர் ரசிகர்களிடம் அந்த அளவிற்கு கொண்டு சென்றது இல்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிநய்க்கு பெரிய அளவில் திருப்பத்தை கொடுத்திருந்தது.

பாவனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு

பாவனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தாலும் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் அறிமுகமானது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் பிக் பாஸ் 5 வது சீசனில் அபிநய்க்கு நடந்த பிரச்சனையால் அவருடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் பல தகவல்கள் பரவி வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் இருக்கும்போது அவருக்கும் பாவனிக்கும் இடையே இருந்த பிரணட்ஷிப் பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்தது. பாவனி கூட நேரடியாக நீங்கள் என்னிடம் நட்பாக தானே பழகுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, ஆமாம் அதில் என்ன சந்தேகம் அப்படி என்று தெளிவாக பதிலை கூறி இருந்தாலும், சக போட்டியாளர்களாலும், பாவனியாலும் பல நேரங்களில் அபிநய் மீது குற்றம்சாட்டப்பட்டது .

தொடர்ச்சியாக கேட்கப்படும் கேள்விகள்

தொடர்ச்சியாக கேட்கப்படும் கேள்விகள்

அபிநயால் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பிரச்சனைகள் காரணமாக அபிநயின் மனைவி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பெயருக்கு பின்னாடி இருந்த அபிநய் பெயரை மாற்றி அவருடைய தந்தை பெயரை இணைத்து விட்டார். இதனால் சமூக வலைத்தளத்தில் பல யூகங்கள் கிளம்பின. அபிநய் மற்றும் அவருடைய மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி அதிகமாக பரவி வந்தது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிநய் தற்போது தன்னிடம் தொடர்ச்சியாக வரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். தற்போதைய சூழலில் இந்த மாதிரி கேள்விகள் தான்

தனக்கு வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறார்.

அபிநயின் தெளிவான பதில்

அபிநயின் தெளிவான பதில்

அபிநயிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள போகிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அவர் ஆமாம் நானும் இந்த கேள்வியை பலமுறை சமூக வலைத்தளத்தில் பார்த்து இருக்கிறேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்னுடைய மனைவிதான் என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே என்று தன்னுடைய கருத்துக்களை பதிலாக அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நாங்கள் விவாகரத்து செய்ய போகிறோமா என்று கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில் என்று அபிநய் மற்றும் அவருடைய குழந்தை மனைவி மூவரும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார், இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் அப்படி என்றால் அபிநய் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக இருந்து வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+