பிக் பாஸ்க்குள் இதுதான் நடக்கும்.. விசித்ரா என் தொழிலை பற்றி சொன்ன வார்த்தை.. அன்ன பாரதி எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக அறிமுகமாகி ஒரே வாரத்தில் எலிமினேஷன் ஆனவர்தான் அன்னபாரதி.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பல பட்டிமன்றங்களில் பேசி பலருக்கும் பரீட்சை மாணவராக இருந்தாலும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை பற்றி பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது நிறைய விஷயங்கள் வெளியே காட்டப்படவில்லை. அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும் போது விசித்திரா என்னுடைய தொழிலை பற்றி பேசியதால் எனக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டது என்றும் அன்னபாரதி கூறியிருக்கிறார்.
அன்ன பாரதி பட்டிமன்ற பேச்சாளராக இருப்பதால் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு வலுவான போட்டியாளராக வருவார் என்று கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் முதல் வாரத்திலேயே ஓட்டுகளின் அடிப்படையில் அவர் நாமினேட் ஆகியிருந்தார். இந்தநிலையில் வெளியே வந்த அன்னபாரதி பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் எனக்கு பிக் பாஸ் வீடு ஆரம்பத்தில் புதுமையாக இருந்துச்சு. வெளியே நான் பார்த்த பிக்பாஸுக்கும் உள்ளே நான் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்துச்சு. என்னடா இது கேமராவுக்காக இப்படி நடிக்கிறாங்களேன்னு தோணுச்சு. நான் கொஞ்சம் சாப்ட்டானா நபர். என்னுடைய அடிப்படை குணமும் கூட அதுதான். கேமராவுக்காக மெனக்கட்டு ஒரு விஷயம் பண்ண மாட்டேன்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சிலர் அப்படி எல்லாம் கிடையாது. கேமரா அட்டென்ஷனுக்காக சிலர் வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பல நிகழ்வுகள் வெளியே காட்டப்படாமல் இருந்திருக்கிறது. நான் பிக்பாஸ் வீட்டிற்குள் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் உள்ளே சென்ற சில நாட்களிலேயே எனக்கும் விசித்திராவிற்கும் பெரிய சண்டை வந்தது.
அது ப்ரோமோவில் கூட காட்டவில்லை. எபிசொட்டிலும் அது காட்டியதாக தெரியவில்லை. அவர் பட்டிமன்ற தொழிலை குறித்து இளக்காரமாக பேசி இருந்தார். அதனால் நான் கடுமையாக விசித்திராவிடம் சண்டை போட்டு இருந்தேன். அதற்கு விசித்திரா பிறகு இதனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அதுவெல்லாம் வெளியே காட்டப்படவே இல்லை.
அதுபோல பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் இருந்த நான் எதற்காக பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தேன் என்று பலரும் கேட்கிறார்கள். நான் உண்மையில் மாயா குரூப் செய்தது போல பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று செய்யவில்லை. அந்த நேரத்தில் பிரதீப் கூல் சுரேஷ் பற்றி பேசியது தவறு அதற்கு தான் நான் ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்தேன். அதற்காகத்தான் நான் என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்து இருந்தேன்.
கூல் சுரேஷ் பிரதீப் பிரச்சனை வந்தப்ப முதல் ஆளா நான் தான் பிரதீப்கிட்ட சண்டை போட்டு குழந்தைகள் பெரியவங்கன்னு எல்லாரும் பாக்குறாங்க. பொது நிகழ்ச்சியில் இப்படி பேசுறது தப்பு பிரதீப்ன்னு நான் நேரடியாகவே அவர்கிட்ட சொன்னேன். ஆனால் பிரதீப்பிடம் எல்லோரும் சொல்லியும் அவர் மீதுள்ள தவறை உணராமல் அப்படித்தான் பண்ணுவேன்னு சொன்னாரு.
என் மேல பிரதீப்க்கு மரியாதை இருந்தது. அதனால அந்த பிரச்சனை அப்போ என்கிட்ட பேசுனதுக்காக மன்னிப்பு கேட்டார். கெட்ட வார்த்தை பேசாதீர்கள் என்று சொன்னதை மட்டும் அவர் கடைசி வரைக்கும் கேட்கல. அவர் கேட்டிருந்தா வேற லெவலில் இருந்திருக்கும். அதுபோல பிரதீப்புக்கு எதிரா நான் உரிமை குரல் எழுப்பினது உண்மைதான்.
ஆனால் அதற்குப் பிறகு கமல்ஹாசன் விசாரிக்கும் போது நான் பிரதீப் இந்த விளையாட்டில் தொடரலாம் என்று தான் சொல்லிட்டு வந்தேன். அதுபோல நான் வேறு யாரிடமும் கலந்து ஆலோசித்து உரிமை குரல் தூக்கல. அதுபோல நான் அந்த வீட்டிற்குள் இருக்கும்போது மாயா என்னிடம் வாங்க புறணி பேசலாம்னு சொன்னாங்க.
ஆனால் நான் என்னங்க சொல்றீங்க நான் அப்படியெல்லாம் வரல என்று சொல்ல அதற்கு எனது புறணி இல்லன்னா பிக் பாஸ் வீடே இல்ல என்று சிரித்தார்கள். வெளியே இருக்கும் போது பார்க்கிற பிக்பாஸ் வேற உள்ளே எல்லோரும் பிளான் பண்ணி தான் விளையாடுறாங்க. லவ் கன்டென்ட், சண்டேன்னு அவங்க அவங்க குரூப் சேர்ந்து விளையாடிகிட்டு இருக்காங்க என்றும் அந்த பேட்டியில் அன்னபாரதி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications