பிரதீப் அவங்க அம்மாவோடு எங்க அப்பாவை பற்றி பேசினாரா? இது ரொம்ப தப்பு.. யுகேந்திரன் ஓப்பன் அப்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பிரதீப் யுகேந்திரன் அப்பாவோடு தன்னுடைய அம்மாவை சேர்த்து வைத்து பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் அது குறித்து யுகேந்திரன் இன்று பிக் பாஸ் பற்றியும் அதோடு பிரதீப் பற்றியும் சில தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

சில தினங்களாகவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி தான் இணையதளத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் அதிரடியாக கடந்த வாரம் சனிக்கிழமை எபிசோட்டில் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து ரசிகர்களும் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய அதிருப்திகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் பலர் கமல்ஹாசன் எடுத்த இந்து முடிவு தவறானது என்று அவரை டேக்ஸ் செய்து பதிவு வெளியிட்டு வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா குரூப் சதி செய்து பிரதீப்பை வெளியேற்றி விட்டனர் என்றும் பலர் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இருக்கும்போது அவர் சக போட்டியாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் பிரதீப் சில போட்டியாளர்களிடம் யுகேந்திரன் வெளியே போகும்போது நான் உண்மையில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். யுகேந்திரன் வெளியே போகும்போது அவர் கிட்ட நேரடியாகவே சில விஷயத்தை சொன்னேன். என்னனா எங்க அம்மாவை எங்க அப்பா கூட அவ்வளவு சிரிக்க வச்சது கிடையாது.
ஆனால் உங்க அப்பா எங்க அம்மாவை அவர் பாட்டு மூலமா அவ்வளவு சந்தோசப்பட வச்சிருக்கார். எங்க அம்மா தினமும் தூங்கும்போது உங்க அப்பா கூட தான் கனவில் படுத்து இருக்காங்க. அதனால நீ எனக்கு அண்ணன் தான் வரும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் பிரதீப் பேசியிருக்கிறார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அம்மாவை பற்றி இப்படி எல்லாம் யாராவது பேசுவார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து யுகேந்திரன் முதல் முறையாக பிரபல சேனல் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நானும் பிரதீப் எங்க அப்பா பத்தி பேசின வீடியோவை பார்த்தேன். பிரதீப் பொதுவா நம்மள மாதிரி கிடையாது.
அவர் ஒரு வித்தியாசமான ஆளு. பிரதீப் கிட்ட எந்த ஒரு டாபிக் சொன்னாலும் அது பற்றி அவருக்கு நல்லாவே தெரியும். ரொம்பவே படிச்சவரு. எல்லா விஷயங்களையும் மண்டைக்குள் ஏற்றிக் கொண்டே இருப்பதாலேயே என்னவோ அவருடைய கேரக்டர் அப்படி வித்தியாசமாக மாறி இருக்கிறது. எதையும் ஆழ்ந்து கனவு உலகத்தில் தான் அவர் பேசிக் கொண்டிருப்பார்.

அந்த மாதிரி தான் எங்க அப்பாவை பற்றி கூட அவர் பேசினதா நான் எடுத்துக்கொண்டேன். எனக்கு அதுல எந்த தப்பான விஷயமாகவும் தெரியல. ஏன்னா தப்பான எண்ணத்தில் பிரதீப் அப்போ என்கிட்ட அப்படி பேசவும் இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் சிலர் பிரதீப்பை எப்படியாவது காலி பண்ண வேண்டும் என்று அவர் மீது சில குற்றச்சாட்டுகளை போட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்று அந்த பேட்டியில் யுகேந்திரன் பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications