பிக் பாஸ் பிரபலத்துக்கு நடந்த கொடூரம்.. முகம் முழுக்க காயம், பல் உடைப்பு! கதறிய நடிகை
சென்னை: மும்பையில் , தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையும் இந்தி பிக் பாஸ் பிரபலமும் ஆன பிரீத் சிங், தன்னை ஒரு கிளப்பில் கடுமையாக தாக்கியதாக கூறி வெளியிட்ட வீடியோ, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் அவருடைய முகம் எல்லாம் வீங்கி போல் இருக்கிறது. அதை பார்த்ததும் பலரும் என்ன ஆச்சு என்று பதறிப் போய் கேள்வி செய்தி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ப்ரீத் சிங் வீடியோ
இந்த சம்பவத்துக்குப் பிறகு, ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. கண்கள் வீங்கிய நிலையில், முகத்தில் அடிபட்ட சுவடுகள், மேலும் ஒரு பல் உடைந்திருப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
வீடியோவுடன் அவர் எழுதியிருந்தது மிகவும் கவனத்தை ஈர்த்தது. "மும்பை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று எப்போதும் கேட்டிருக்கேன். ஆனா என்னை இப்படியா வரவேற்கும்னு நினைக்கல. இப்போ கூட நான் நடுங்கிக்கிட்டே இருக்கேன். என்ன நடந்துச்சுன்னே புரிஞ்சுக்க முடியல..." என்று அவர் கூறியுள்ளார்.
சாதாரண வாக்குவாதம்
ப்ரீத் கூறிய விவரப்படி, அந்த இரவு அவர் தனது நண்பருடன் கிளப்பில் அமைதியாக நேரம் செலவழித்து கொண்டிருந்தாராம். அப்போது திடீரென ஒரு பெண் வந்து, "நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்?" என்று கேட்டு வாக்குவாதத்தைத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது சில நிமிடங்களில் கடுமையான சண்டையாக மாறியதாகவும், பின்னர் அந்த பெண்ணின் ஆண் நண்பர் இடையில் தலையிட்டு தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
"என்னை அவ்வளவு பலமாக அடிச்சாங்க... என் பல் உடைஞ்சு போச்சு, முகம் முழுக்க வீக்கம். சுற்றியிருந்தவர்கள் வந்து தடுத்ததால அவங்க என்ன அடிக்கிறத நிறுத்துனாங்க" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இன்ஃப்ளூயன்சரின் நண்பர்
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து ப்ரீத் சிங் எந்த பெயரையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், அந்த சண்டையை தொடங்கிய பெண் "ஒரு இன்ஃப்ளூயன்சர்" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் யார் அந்த நபர் என்ற கேள்வி எழுந்து பலரும் யூகிக்க ஆரம்பித்துள்ளனர்.

நண்பர்கள் ஆதரவு
இந்த வீடியோ வெளியானதும், MTV Splitsvilla 16 நிகழ்ச்சியில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உட்பட பலரும் ப்ரீத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடன் இருந்த தோழி ஒருவர், "அந்த இரவு நாங்கள் அனுபவித்தது ஒரு நைட்மேர் மாதிரி இருந்தது. இது பற்றி பேசுறதுக்கு தைரியம் வேணும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பலரும், "நீங்க போலீசில் புகார் கொடுக்கணும்... இது சும்மா விடக்கூடாது" என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல், நடிகை பாத்திமா சனா கூட, "உடனே புகார் கொடுங்கள்... நீங்க விரைவில் நலமடையணும்" என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை குறித்து கேள்வி
இந்த சம்பவம் வைரலான பிறகு, சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர்"இது குறித்து போலீசில் புகார் கொடுத்தீர்களா?" இதுதான் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவரை அதற்கு தெளிவான பதில் இல்லை. ஆனால், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் ப்ரீத் சிங் வெளியிட்ட வீடியோ மற்றும் சமூக வலைதள பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், இது மீண்டும் ஒருமுறை பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
சினிமா, ரியாலிட்டி ஷோ உலகம் என எந்த துறையிலும் இருந்தாலும், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications