Bigg Boss Hindi: ஸ்ருதிகா தொட்ட பொருளை தொட மாட்டேன்! மோசமான தீண்டாமை.. சல்மானும் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக இருக்கும் தமிழ் நடிகை ஸ்ருதிகாவிற்கு தொடர்ந்து தீண்டாமை பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது குறித்து சல்மான் கான் கூட ஸ்ருதிகாவிற்கு ஆதரவாக பேசாமல் அவரையே குறை சொல்லி இருக்கிறார். கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் நடந்த நிகழ்வுக்காக ஸ்ருதிகாவிற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இதுவரைக்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முதல் முறையாக நடிகை ஸ்ருதிகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரை ஹிந்தி ரசிகர்கள் இவர் நடிக்கிறார் என்று சொல்லி வந்தனர். ஆனால் போகப் போக அவரை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

இவருக்கு தமிழை போலவே ஹிந்தியிலும் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஆனால் கடந்த வாரத்தில் தான் ஸ்ருதிகாவிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிற்கு விபின் என்ற போட்டியாளர் சப்போர்ட்டாக இருந்தார்.
ஆனால் சில நாட்களாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அப்போது விபின் நான் ஸ்ருதிகா தொட்ட பொருளை தொட மாட்டேன் என்று முகம் சுளிக்கும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார். அது குறித்து கண்டிப்பாக சல்மான் கான் தலையிட்டு பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால் கடந்த சனிக்கிழமை எபிசொட்டில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுக்கு ஆப்போசிட் ஆக தான் நடந்தது. அதாவது அன்றைய நிகழ்ச்சியில் சல்மான் கான் கையில் ஒரு சீட்டுக்கட்டை வைத்திருக்கிறார். அதை வைத்து இதில் காட்டப்படும் ஒவ்வொரு சீட்டும் யார் என்று மற்றவர்களை பற்றி சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல ராஜா கார்ட் யாரு என்று கேட்க அங்கிருக்கும் போட்டியாளரின் ஒருவர் அது நான்தான் என்று சொல்கிறார்.
ஹிந்தி பிக் பாஸில் தெறிக்கவிடும் ஸ்ருதிகா.. முதல் நாளே ரசிகர்களை கதற விட்டுட்டாங்களே!
அடுத்ததாக ராணி கார்ட் காட்டும் போது அங்கிருக்கும் பெண் போட்டியாளர் என்று சொல்கிறார். இப்படி காட்டிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதிகாவிடம் சல்மான் கான் எதார்த்தமாக பேசும் போது ஸ்ருதிகா சார் விபின் நான் தொட்ட பொருளைத் தொட மாட்டேன் என்று சொல்கிறார் அப்படி பார்த்தால் நான் தான் இந்த வீட்டில் சமைக்கிறேன். நான் தொட்ட பொருளை தொடாதவங்க யாரும் சாப்பிடக்கூடாதுல சார்..
நான் ஹைஜினிக்கா இல்லை என்று முகம் சுளிக்கிற மாதிரி ஒரு மாதிரி பேசுறார் என்று ஸ்ருதிகா சொல்ல அதற்கு சல்மான்கான் என்ன ஸ்ருதிகா நீங்க விட்டம் கார்டு காட்டுறீங்களா? என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கேட்டு இருக்கிறார். ஸ்ருதிகா சொன்ன குற்றச்சாட்டுக்கு விபினை விசாரணை செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ஸ்ருதிகா மீது தான் தப்பு என்பது போலத்தான் சனிக்கிழமை எபிசோட்டில் தொடர்ச்சியாக சல்மான் கான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் ஸ்ருதிகாவிற்கு முகம் அசந்து போய்விட்டது. ஆனாலும் சார் நான் என்ன சொல்ல வரேன்னா நான் தொட்டை எந்த பொருளையும் தொடுகிறது அசிங்கம் என்பது போல விபின் பேசுகிறார் என்று மீண்டும் சொல்கிறார்.
ஆனால் அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டு சல்மான்கான் உங்க கணவர் அர்ஜுன் பாலி போய் இருக்கிறார். அந்த புகைப்படம் கூட வந்திருக்கிறது என்று ஸ்ருதிகாவை கிண்டல் செய்யும் வகையில் பேச்சை மாற்றி இருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.
அதுபோல சனிக்கிழமை சல்மான்கான் போன பிறகு ஸ்ருதிகா நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அப்போது விபின் கிராஸ் செய்யும்போது கூட "என்ன விட்டம் கார்டு உள்ளே போ..." என்று மிரட்டுற மாதிரி பேசுறார்.
சல்மான் கான் விபினுக்கு சப்போர்ட் செய்து பேசியதால்தான் விபின் இவ்வளவு தைரியமாக ஸ்ருதிகாவை மீண்டும் சீண்டி பார்க்கிறார். அதற்கு ஸ்ருதிகா கொஞ்சம் கூட அசராமல் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று முதலில் தெரிஞ்சுக்க. என்னிடம் மரியாதை நீ கொடுத்தால் தான் உனக்கும் மரியாதை கிடைக்கும். எனக்கும் மரியாதை இல்லாமல் பேச தெரியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications