லியோ படத்திற்கு பிறகு ஜனனி வெளியிட்ட புகைப்படம்.. அடடா என்ன தத்துவம்.. அந்த வெட்கம் தான் ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த இலங்கை நடிகையான ஜனனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார்.
ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இப்போது தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் குறித்து ஜனனி வெளியிட்டிருக்கும் தத்துவத்தை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் மோதலும் காதலும் சீரியல் நடிகை.. நெகிழ்ச்சியான பதிவு.. இப்படி ஒரு புகைப்படமா?
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து பெயரும் புகழோடும் இருந்தவர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த பெயரை கெடுத்துக் கொண்டு போய் இருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த ஒரு சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.
அந்த வகையில் ஒருவர் தான் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்த விஜே ஆகவும் நடிகையாகவும் இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இதனாலேயே பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முதலாக இவருக்கு தான் ஆர்மி தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு சீசனிலும் யாருக்கும் முதலில் ஆர்மி தொடங்கப்படுவது என்பது பெரிய அளவில் கெத்தாக பேசப்பட்டு வரும், அந்த வகையில் ஜனனிக்கு கடந்த சீசனில் அதிகமான ரசிகர்கள் ஆர்மி தொடங்கியிருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் இவருடைய பர்பாமன்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரியதாக இல்லை என்பது பலருக்கு வருத்தமாகவும் இருந்தது.
க்யூட்டான அழகோடு துரு துருவென்று கேரக்டரில் ஜனனி ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் பலருடைய மனதை கவர்ந்திருந்தாலும் பிறகு பெரிய அளவில் சுவாரசியமாக எதையும் செய்யவில்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் திறமைக்கு வாய்ப்பு கிடைக்க தான் செய்யும் என்பது போலத்தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜனனி வெளியே சென்றிருந்த அடுத்த சில நாட்களிலே இவருக்கு பம்பர் பரிசாக லியோ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் நடிகர் விஜய்யோடு முக்கிய கேரக்டரில் ஜனனி நடித்திருந்தார். இதனால் இவருடைய ரசிகர்கள் இதை கொண்டாடி மகிழ்ந்து இருந்தனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு ஜனனி வழக்கம்போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக தொடங்கி இருக்கிறார். அதில் இப்போது வெள்ளை நிற சுடிதாரில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து குவித்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டிவிட்ட ஜனனி இதற்கு ஒரு மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில் "நீங்கள் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து விட முடியும். நிகழ்காலத்தை அனுபவித்து உணர முடியும்... ஆனால் வரும் காலத்தை விரும்பும்படி உருவாக்கிட முடியும்" என்று கூறி இருக்கிறார். இதை பாராட்டும் ரசிகர்கள் கூடவே உங்கள் புகைப்படத்தில் அந்த வெட்கப்படுற போஸ் வேற லெவல் இருக்கிறது என்று கமெண்ட் பாக்ஸை பலர் நிறைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications