ஜூலி முகத்தை நாக்கால் வருடிய நாய்க்குட்டி.. அவர் காட்டிய எக்ஸ்பிரஸன்!
சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக ஜொலிக்கும் பிக் பாஸ் ஜூலி தற்போது வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் நாய்க்குட்டி கூட வா இப்படி எல்லாம் பண்ணுவீங்க என்று கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக யாரென்றே தெரியாமல் இருந்த ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார் .
அதுவும் இவருக்கும் ஓவியா விற்கும் ஏற்பட்ட பிரச்சனையை யாரும் மறந்துவிட முடியாது .அந்த அளவுக்கு இவரை வைத்து பலரும் கழுவிக் கழுவி ஊற்றி வந்தனர்.

காட்டில் மழை
என்னதான் நெகட்டிவ் கமெண்ட்களை போட்டாலும் இவர் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு இவரது காட்டில் நல்ல மழைதான் .இவர் அதற்கு முன்பாக செய்துவந்த செவிலியர் பணியை கூட விட்டுவிட்டு முழுநேர மாடலிங்கில் காலடியை எடுத்து வைத்துவிட்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரின் வாழ்க்கை மாறி இருக்கிறது .அதில் ஜூலியும் ஒருவர்.

சிரிப்புக்கு அடிமை
பலருக்கும் பரிச்சயமான இவரது முகம் தெத்துப்பல் சிரிப்புக்கு பல ரசிகர்கள் அடிமையாக மாறி விட்டார்களாம் .அதனால் தான் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதும் கமெண்ட் களால் நிரப்பி வருகிறார்கள். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் படை போல திரண்டு வருகிறார்கள்.

கவலைப்படவில்லை
அதனால்தான் அவர் இவரைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்கள் போடும் நெட்டிசன்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. என்னை புரிந்துகொண்ட என்னுடைய ரசிகர்கள் மட்டும் எனக்கு போதும் என்றுதான் இவர் அசால்டாக இவர்களின் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார். கடற்கரை முதல் தெருவோரம் என பல இடங்களிலும் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நாய்க்கு முத்தம்
அதுவும் நாயுடன் இவர் கொஞ்சி விளையாடும் வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் .ஒரு நாய் குட்டியுடன் இவர் முத்தம் கொடுத்து அந்த நாய்க்குட்டியும் பதிலுக்கு இவருக்கு தன் நாக்கினால் இவரது முகத்தை எச்சில் பண்ணி கொண்டிருக்கிறது. இதற்கு ரசித்து முகத்தில் எக்ஸ்பிரஸனை காட்டிய ஜூலியை நெட்டிசன்கள் தங்களால் முடிந்த அளவிற்கு கமெண்ட்களால் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

வித்தியாசமா இருக்கே
இதுவரைக்கும் இவர் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்களில் இது வித்தியாசமாக இருந்தாலும் இது அன்பின் வெளிப்பாடு தானே என்று ஜூலியன் ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். அதுவுமில்லாமல் அவருடைய அழகையும் சினிமாவுக்காக தன்னுடைய உடம்பை குறைத்து அவர் மேலும் மெருகேறி அழகாக இருப்பதையும் வர்ணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications