பீச் மணலில் முட்டி போட்டு.. ஆத்தாடி ஜூலியா இது.. சொக்குதே!
சென்னை: அலைகளின் ராட்சசியாக மாறிய பிக்பாஸ் ஜூலியின் போட்டோக்களை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள் .
போட்டோ ஷூட் என்ற பெயரில் இவர் செய்யும் அட்ராசிட்டி அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து அவருடைய ரசிகர்களே கிறுகிறுத்துப் போய் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலர் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது அந்த மாதிரிதான் இவருக்கும் ஏற்பட்டது.

வளர்ச்சி சூப்பரப்பு
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பாதியிலேயே வெளியே வந்தாலும் யாரும் எதிர்பார்க்காத அளவில் இவர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார் .அதுவும் இவர் படித்து வேலை பார்த்த துறையை விட்டு விட்டு அப்படியே புதிய களத்தில் களமிறங்கி மாடலிங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார் .இந்த வீட்டிற்குள் இருக்கும் போது கூட இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் தற்போது இவருடைய அழகில் மயங்கி இவரை கொஞ்சி வருகிறார்கள்.

இப்ப ரொம்ப பேமஸ்
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு யாரென்றே தெரியாத அளவில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இவர் பிரபலமடைந்ததைவிடவும் இந்த நிகழ்ச்சியில் இவர் வெகுவாகவே பிரபலம் அடைந்து விட்டார் .முதலில் இவரை வெகுளியான ஒரு பெண்ணாக நினைத்து கொண்டிருந்த ரசிகர்கள் கூட ஓவியா விஷயத்தில் இவர் நடந்து கொண்டதை வைத்து கழுவி கழுவி ஊத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

ரசிகர்கள் ரசனை
ஆனாலும் இவர் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவரை வெறுத்து ரசிகர்கள் கூட ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் .அந்த அளவிற்கு இவர் மாடலிங்கில் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார். சில நேரங்களில் சமூக அவலங்களையும் சில நேரங்களில் விழிப்புணர்வு போட்டோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

புதுசு புதுசாக
விதவிதமாக மேக்கப் போட்டு போட்டோஸ் வெளியிட்டு போர் அடித்து விட்டது போல அதனால்தான் எந்த மேக்கப்பும் போடாமல் ரசிகர்களை கவர்வது எப்படி என்று புதுசு புதுசாக யோசித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்து தற்போது இவரை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் தான் படை பட்டாளத்தோடு அதிகரித்து வருகிறார்கள்.

கடற்கரையில் செம போஸ்
அதுவும் தற்போது இவர் கடற்கரையில் ஒரு அழகான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார். தற்போதுஅதை இன்ஸ்டாகிராமில் ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறார் .இந்த போட்டோக்களை பார்த்து பலர் கிறங்கிப் போய் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள். அதிலேயும் சிலர் கவிதைகளையும் கொட்டி வருகிறார்கள் .சிலரோ அழகை அனு அணுவாக ரசித்து புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

அலையா ஜூலியா
கடல் கரையில் கடல் நுரையை அள்ளி ஆடையாக அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி கிறங்கடிக்கும் பார்வையால் அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறார் .இந்த போட்டோவை இவர் அப்லோடு செய்ததும் லைக்கும் கமெண்டும் மலை போல உயர்ந்து வருகிறது.. சும்மா சொல்லக் கூடாது.. போட்டோஸ் எல்லாமே வேற லெவல்தான்.












Click it and Unblock the Notifications