பிறப்புறுப்பில் யாரும் ஜாதி பார்ப்பதில்லையே.. போட்டுத் தாக்கிய ஜூலி.. செம ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பில் ஜாதி பார்க்கும் மனிதர்கள் பிறப்புறுப்பில் சாதி பார்ப்பது இல்லையே என்று பாலியல் கொடூரர்களை மன உளைச்சலோடு திட்டித்தீர்த்துள்ளார் பிக் பாஸ் ஜூலி.

இதுவரைக்கும் எத்தனையோ போட்டோ ஷூட் நடத்தி பிக் பாஸ் ஜூலி பிரபலமாகி இருக்கிறார் . அவர் ஒவ்வொரு போட்டோசூட்டிலும் வித்யாசமாக தன்னை வருத்தி கூட போட்டோஸ் போட்டிருக்கிறார். ஆனால் இப்போது இவர் போட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் இவர் இந்த மாதிரி ஒரு வீடியோ போட்டிருப்பது அனைவரையும் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவுக்கு பலரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

ஹாத்ராஸ் சம்பவம்

ஹாத்ராஸ் சம்பவம்

நாள்தோறும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் பல்வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது . அது அனைவருக்குமே தெரிந்த ஆளும் பலரும் அதை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கிறனர். அதுவே அதே பிரச்சினை தன் வீட்டில் நடந்தால் மட்டும் குதித்துக்கொண்டு கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு சில நாட்களுக்குத்தான் ஒரு பிரச்சனையை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்கிறார்கள். உடனே அதனை மறந்து விடுகிறார்கள் .

ஜூலி வீடியோ

ஜூலி வீடியோ

அந்த மாதிரி தான் தற்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஒரு பெண் இறந்திருப்பதை பகிரங்கமாக கோபத்தோடு பிக் பாஸ் ஜூலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவர் முகமெல்லாம் அடிபட்டது போல ஹாஸ்பிட்டலில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் .அது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்ததும் பல்வேறு ரசிகர்களும் இவருக்கு ஆதரவை கூறி வருகிறார்கள் .

மறந்தாச்சு

மறந்தாச்சு

உத்தர பிரதேசத்தில் தற்போது ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதனைப் பற்றி ஒரு சில நாட்கள் மட்டுமே அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர் . நாட்கள் செல்ல செல்ல ஒரு வாரத்திற்குள் அனைவரும் அதை மறந்து விட்டனர். அடுத்ததாக வந்த ஐபிஎல் பற்றியும் பிக்பாஸ் பற்றியும் அனைவரின் மன நிலமையும் மாறிவிட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால் இந்த மாதிரி பிரச்சனைகள் மேலும் நடக்காமல் இருப்பதற்காக தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலர் கூறி வந்தாலும் நமது அரசியலமைப்புச் சட்டம் அந்த அளவிற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படவில்லை. மாற்றி அமைத்தால்தான் பெண்கள் பாதுகாக்கப்பட முடியும் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார் ஜூலி. அந்த வீடியோவில் என்னுடைய இந்த நிலைமையை பார்த்து பலர் அதிர்ச்சி ஆகி இருப்பீர்கள். ஆனால் இது ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு என்னுடைய குரல் அதற்காகத்தான் இந்த மாதிரி வீடியோ போட்டு இருக்கிறேன்.

முழுக்க முழுக்க விழிப்புணர்வு

முழுக்க முழுக்க விழிப்புணர்வு

இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு வீடியோ. நம்ம நாட்டுல எவ்வளவு கஷ்டத்துல பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரியுமா . 2019 இல் மட்டும் டோட்டலா ரிஜிஸ்டர் பண்ணுன ரேப் கேஸ் மட்டும் 32 ஆயிரத்து 33 பேர். இதுல பதினெட்டு வயசுக்கு மேலே இருப்பவர்கள் 27 ஆயிரம் 93 பேர். 18 வயசு கீழ இருப்பவர்கள் ஒரு வயது முதல் 4 மாத குழந்தைகள் வரைக்கும் நாலாயிரத்து 947 கேஸ். இது எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சு இருந்து ரிஜிஸ்டர் ஆனது. ஆனால் இதே மாதிரி இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க.

குரல் கொடுப்போம்

குரல் கொடுப்போம்

இதில் அழுது சாதிக்க வேண்டியது எதுவுமே இல்லை. அனைவரும் புரிஞ்சுகிட்டு இதற்கு எதிராக குரல் கொடுத்து இதை தடுத்து நிறுத்த மட்டும் தான் இதில் மாற்றம் ஏற்படும். இன்னைக்கு நீங்க இந்த மாதிரி பண்ணுனா நாளைக்கு உங்க குழந்தைகளுக்கும் இதே நிலைமை ஏற்படும் என்று கோபமாக கூறியிருக்கிறார் ஜூலி. அதுமட்டுமல்லாமல் நான் எல்லா ஆண்களையும் கூறவில்லை ஒரு சில காமக் கொடூரர்களைத்தான் நான் கடுமையாக குற்றம் சாட்டுகிறேன் என்று சொல்லியுள்ளார் ஜூலி.

கெட்டப் போட்டு வீடியோ

கெட்டப் போட்டு வீடியோ

இவருடைய இந்த ஆக்ஸிடெண்ட் ஆன போட்டோவை பார்த்து பலரும் ஷேர் பண்ணியிருக்கிறார்கள் . ஆனால் இதுவரைக்கும் யாருக்கும் என்ன ரீசன் என்று தெரியவில்லை . ஆனால் இவர் இப்போது வீடியோ போட்டு இருப்பதை பார்த்த பிறகுதான் இதற்காகத்தான் அவர் இந்த மாதிரி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் என்று தெரிகிறது . அதையும் கோபமாக இது எனக்கு நடந்திருந்தா நீங்கள் எவ்வளவு கோபமாக எல்லாருக்கும் ஷேர் பண்ணுவீங்க. அதுபோலத்தானே மத்தவர்களுக்கும் என்றும் கேட்டிருக்கிறார் ஜூலி.

சட்டும் கடுமையாகணும்

சட்டும் கடுமையாகணும்

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இதை எல்லாரும் சேர்ந்து முன் எடுத்து வைத்தால்தான் இதில் மாற்றம் கொண்டுவர முடியும். பிறப்பில் ஜாதி பார்க்கும் நாம் பிறப்பிறுப்பில் மட்டும் பார்ப்பதில்லையே என்றும் காமவெறி பிடித்த ஆண்களை சாடியுள்ளார். இவருடைய இந்த வைரலான வீடியோ வை பார்த்து பல ரசிகர்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் மனதில் இருக்கும் மொத்த குமுறலையும் இந்த வீடியோவில் வெளியிட்டிருக்கிறார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இன்று பலரும் நாங்களும் இதே மனநிலையில் தான் இருக்கிறோம். நாங்கள் மனதில் நினைத்ததைதான் நீங்களும் பேசி இருக்கிறார்கள் என்றும் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் . ஆனால் யார் என்ன சொன்னாலும் சட்டம் கடுமையாக மாறினால்தான் எவனும் இந்த மாதிரி பண்ணுவதற்கு பயப்படுவான் என்று கூறி வருகிறார்கள். இந்த மாதிரி நயவஞ்சகர்கள் திருந்தவே மாட்டார்கள் போலும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+