குறையாத வன்மம்.. பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடந்த கூத்து.. ப்ரோமோவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து சில மாதங்கள் கழித்து இப்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் பிக் பாஸ் கொண்டாட்டம் ஷூட்டிங் முடிவடைந்து இருந்த நிலையில் இதற்கான எபிசோடு வரும் மார்ச் 24ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததுமே கொண்டாட்டம் தொடங்கிவிடும். ஆனால் இந்த சீசன் பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்பி இருந்ததால் இவ்வளவு நாட்கள் ஆனதா என்ற கேள்விகள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
அதிலும் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது பெரிய அளவில் விமர்சனமாகி இருந்தது. அதே நேரத்தில் இந்த சீசனில் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் சண்டை சச்சரவுகளும் வன்மங்களும் தான் நிலைத்திருந்தது. அதனாலயே இந்த சீசன் போட்டியாளர்கள் மீது மக்களுக்கு கொஞ்சம் அதிருப்தியும் இருப்பதாகவே தொடர்ச்சியாக கமெண்டுகள் குவிந்து வருகிறது.

இப்படியான நிலையில் ஒரு வழியாக இந்த சீசனின் கொண்டாட்டம் தொடங்கியது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் கொண்டாட்டத்திலும் போட்டியாளர்களுக்குள் மறைமுகமான தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இந்த கொண்டாட்டத்தை பிரியங்கா தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுபோல விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனாலும் மாயா மற்றும் பூர்ணிமா கேங் அவ்வப்போது வெடிகுண்டுகளை வீசியது போல வார்த்தைகளை வீசி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் தற்போது இந்த எபிசோட்டின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ச்சனாவிற்காக சில ரசிகர்கள் சில பொருட்களை பரிசாக கொண்டு வந்திருக்கின்றனர். அதில் அர்ச்சனாவை ஓவியமாக வரைந்த ஓவியர் கொடுத்த அனுப்பியதாக சில புகைப்படங்கள் வந்திருக்கிறது.

அந்த ஓவியர் இப்போது உயிரோடு இல்லை என்பதால் அவருடைய சார்பாக வேறு சிலர் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுபோல அர்ச்சனாவுக்கு குரல் அரசி என்று ஒரு நினைவு பரிசும் ரசிகர்களால் கொடுக்கப்பட்ட அப்போது ஒரு சிலருடைய முகம் வேறு மாதிரி இருக்கிறது. அது போல மதுரை முத்து தனக்கே உரிய நக்கல் தனத்தோடு இந்த சீசனில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களுக்கு சில பரிசுகளை கொடுத்திருக்கிறார்.
அதில் காலாவதியான கோஸ்ட் அவார்ட் கூல் சுரேஷுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல தினேஷுக்கு "எரிமலை எப்படி பொறுக்கும்" என்ற அவார்டும், பூர்ணிமாவிற்கு 'தினமும் புலம்பல்' என்ற அவார்டும் அதைத்தொடர்ந்து விஷ்ணுவுக்கு பிரஷர் குக்கர் என்று அவார்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல அந்த ப்ரோமோவில் ஆட்டம் பாட்டம் என்று எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.
அப்போது கடைசியாக பிரியங்கா யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று சொல்ல அதற்கு விசித்திரா தினேஷிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு தினேஷ் இந்த பர்டிகுலரான டாபிக் பேசுவதற்கே என்னுடைய வாழ்க்கையில் இல்ல... அப்புறம் என்ன நான் அதை பத்தி பேச என்று பதில் கொடுத்திருக்கிறார்.
அதுபோல இந்த ப்ரோமோவை ரசிகர்கள் கலாய்த்து கமாண்ட் கொடுத்து வருகிறார்கள். அதில் அர்ச்சனாவை பலர் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் இவர்களுடைய சண்டை இன்னும் முடிவடையவில்லை.. அதற்கு ஒரு நிகழ்ச்சி வேற கேடா என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications