பிரதீப் மேல எனக்கு கோபம் இருக்கு.. ஆனால்! “இவங்க” தான்.. மொத்த பிக் பாஸ் ரகசியத்தையும் உளறிய மணி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த சீசனில் ரன்னராக தேர்வான மணி இன்று முதல்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதோடு பிரதீப்புக்கு தான் எதற்காக ரெட் கார்டு கொடுத்தேன் என்றும் பிரதீப் மீது தனக்கு இப்போதும் கோபம் இருக்கிறது என்றும் மணி கூறி இருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற சில போட்டியாளர்கள் குறித்தும் மணி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மணி முதல் முறையாக இன்று பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் எதற்காக பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அப்போது பிரதீப்புக்கும் எனக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் நல்ல பாண்டிங் இருந்துச்சு.
பிரதீப் என்னிடம் எப்போதுமே சொல்லுவான். நீ ரொம்ப ஜாலி டைப் நா உன்னை எல்லாம் காலி பண்ண மாட்டேன் என்று சொல்லுவான். அதனால எனக்கு பிரதீப் ரொம்ப பிடிக்கும். பிக்பாஸ் வீட்டுக்குள்ள என்னை பொறுத்த வரையில் ரொம்ப ஸ்ட்ராங்கான பிளேயர் என்றால் அது பிரதீப் தான். ஆனால் சில இடங்களில் பிரதீப் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. பிரதீப் மீது எனக்கு கோபம் இருக்க தான் செய்கிறது.
பல இடங்களில் நான் பிரதீப்புக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறேன். நீ இந்த மாதிரி பேசாத, இப்படி செய்யாதே என்று பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்த அன்று கூட காலையில் நான் பிரதீப் பாத்ரூம் போகும்போது லாக் பண்ணாமல் போன விஷயத்தைப் பற்றி சொன்னேன். அப்போதும் அவன் அலட்சியமாகத்தான் பேசியிருந்தான். அதுபோல கமல் சார் முன்பு கூட எல்லோரும் செங்கொடி தூக்கிய போது நான் பிரதீப்புக்கு எதிராக தூக்கவில்லை.
பிறகு எல்லோரும் தங்களுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது உண்மையில் அப்படி எதுவும் நடந்திருக்கும் என்று நினைத்தேன். ஏன்னா என் கண்ணு முன்னாடியே பிரதீப் இந்த மாதிரி எல்லாம் பண்றானே, அப்போ அந்த பெண்களிடமும் இப்படி பண்ணி இருப்பானு நான் நினைச்சிருந்தேன். ஆனா அவங்க சொல்லி எல்லாம் நான் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்கல.
பிக்பாஸ் வீட்டு பாத்ரூமில் தாழ்ப்பாள் இல்லைன்னு இப்போ பிரதீப் போஸ்ட் போட்டு இருந்தான். ஆனா உள்ளே தாழ்ப்பாள் இல்லாட்டாலும் ஒரு லாக் இருந்தது. அதை பண்ணி இருக்கலாம்ல, இல்லனா கதவை சாத்தி கூட வச்சிருக்கலாம். அதை நான் பண்ணவே மாட்டேன் என்று சொன்னது தான் எனக்கு புடிக்கல. அது போல பிரதீப் காலி பண்ணனும் என்கிறதுக்காக சிலர் அவன் மீது தவறா குற்றச்சாட்டு வச்சிருக்காங்கறது எனக்கு வெளிய வந்த பிறகுதான் தெரிஞ்சது என்று மணி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications