கடைசி நேரத்தில் தினேஷ் வாழ்க்கையில் விளையாடிய ரச்சிதா..! இதுதான் பழிவாங்கும் படலமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகையான ரச்சிதா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வரும் பதிவு குறித்துதான் ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். அதாவது ரச்சிதாவும் அவருடைய கணவர் தினேஷூம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

இப்போது தினேஷ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நிலையில் தினேஷுக்கு எதிராக ரச்சிதா தொடர்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு வெளியிட்டு வருகிறார்.

bigg boss Rachitha is constantly posting posts against Dinesh on her Instagram story

அதுவும் இந்த நிகழ்ச்சி பைனலுக்கு நெருங்கி இருக்கும் வேளையில் தினேஷ் பற்றி நேற்று மறைமுகமாக தன்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்பது குறித்து ரச்சிதா ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது பலரையும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

ரச்சிதாவிற்கு விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் அறிமுகத்தை கொடுத்திருந்தாலும், பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான். ஆனால் முதல் சீரியலிலே தன்னோடு நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா அதற்கு பிறகு தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

அதுபோல சின்னத்திரை தம்பதிகளில் ரச்சிதா மற்றும் தினேஷுடைய வாழ்க்கையும் சந்தோஷமாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இப்போது பிரிந்து இருக்கின்றனர். கடந்த சீசனில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்ட போது தினேஷ் தன்னுடைய ஆதரவை முதல் நாளிலிருந்து தெரிவித்து வந்தார்.

ஆனால் இந்த சீசனில் தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார். அதிலும் இந்த கடந்த சீசனில் ரச்சிதா டைட்டில் ஜெயிக்காமல் போனது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்று இந்த சீசனில் டைட்டிலை வென்று அவருக்கு பரிசளித்து என்னுடைய காதலை நான் நிரூபிப்பேன் என்று கமல் முன்பு பேசியது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தினேஷ் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் ரச்சிதாவும் தினேஷூம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாளை இந்த நிகழ்ச்சிக்கான கிராண்ட் பினாலே போட்டி நடைபெற இருக்கிறது. இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று இன்று தெரியவரும்.

இந்த நிலையில் தினேஷ் பற்றி ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கும் நிலையில் திடீரென்று ரச்சிதா தன் சமூக வலைதள பக்கத்தில் ஒரு புத்தகத்தை மேற்கோள்காட்டி அதில் உள்ளது போல தான் என்னுடைய வாழ்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். அதாவது கதவுக்கு வெளியே தன்னை நல்லவனாக காட்டிக் கொள்பவனை கதவை சாத்திக்கொண்டு பார்த்தால் அவரது உண்மையான முகம் தெரியும்.

அவர் ஒரு கல்ப்ரேட் பொய்யே பேசுபவர், சுயநலம் பிடித்தவர் என்று அந்த புத்தகத்தில் ஒருவரை பற்றி பதிவிட்டு இருப்பது சுட்டிக்காட்டி இதுபோல் தான் தினேஷ் என்று சொல்வது போல கூறியிருக்கிறார். இதனால் தினேஷ் கடைசியில் ஜெயிக்க கூடாது என்பதற்காக ரச்சிதா இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதே நேரத்தில் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர்ச்சியாக தினேஷோடு கருத்து மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசித்திராவிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து நீங்கள் கப்பு ஜெயிக்கவில்லை என்றாலும் என்னுடைய மனதை ஜெயித்து விட்டீங்க. உண்மையில் நீங்கள்தான் வின்னர் என்று அவரை பாராட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+