நண்டு கதையை கூறி தத்துவத்தை உதிர்த்த ஜனனி.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள் செய்த சிறப்பான வேலை
சென்னை:பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக ஜனனி அறிமுகப்படுத்தப்பட்டபோதே அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாக ஆரம்பித்து விட்டது.
இன்னும் ஒரு லாஸ்ட்லியாவாக இலங்கைப் பெண்ணான ஜனனியை அவரது ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.ஜனனியை இப்பொழுதே சின்ன த்ரிஷா, அடுத்த சாய்பல்லவி என்று பட்டம் கொடுத்து அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
ஜனனியின் வாழ்க்கை டிப்ஸ் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகவும், வைரலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஜனனி ஆர்மி
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் இளம் போட்டியாளராக களம் இறங்கியுள்ள ஜனனி வீட்டிற்குள் போன நாளிலிருந்து பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறார். அவரைக் குறித்து கமெண்டுகளும் மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாக வலம் வர ஆரம்பித்துள்ளது.கண்டிப்பாக எப்படியும் இறுதிப் போட்டி வரை ஜனனியை செல்ல வைத்து விட வேண்டும் என்று அவருக்கான ஆர்மி வேலை பார்க்கத் துவங்கி விட்டது.

இந்த சீசன் லாஸ்ட்லியாவா
பொதுவாக இலங்கை தமிழர் என்றாலே தமிழர்கள் மத்தியில் தனியாக ஒரு மதிப்பு இருக்கும் அதுவும் அழகான தாய்குலம் என்றால் சும்மா விடுவார்களா!! நம்ம நெட்டிசன்கள் தங்களது ஆதரவை கொட்டத் தொடங்கி விட்டனர். ஜனனியும் தன்னுடைய க்யூட்டான நடவடிக்கைகளால் தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பதற்கு தாம் ஏற்றவர் தான் என்று அவ்வப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நிரூபித்து வருகிறார்.

ஜி பி முத்து க்கு ஆதரவு
ஜி.பி முத்து- தனலட்சுமி இடையே ஏற்பட்ட சண்டையில் ஜி.பி.முத்துக்கு ஆதரவாக நின்று பேசி மேலும் தன் மதிப்பை தமிழக ரசிகர்களிடம் உயர்த்திக் கொண்டுள்ளார். பிக் பாஸ் ரசிகர்களிடம் இவருக்கான ஆதரவை பெறுவதற்காக இவரது ரசிகர்கள் ஜனனியின் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அப்படித்தான் தற்பொழுது வாழ்க்கைத் தத்துவத்தை மிக எளிமையாக நண்டை வைத்து கூறிய ஜனனியின் வீடியோவை நகைச்சுவையாக பரப்பி வருகின்றனர்.

புதிய நண்டு கதை
நண்டை வைத்து பல கதைகள் சொல்லப்பட்டு இருக்கும் நம்ம ஊரில் தற்பொழுது அதே நண்டை வைத்து வாழ்க்கை தத்துவத்தை கூறியுள்ளார் ஜனனி. எவ்வளவோ கஷ்டப்பட்டு நண்டின் கூட்டை உடைத்து உள்ளிருக்கும் சிறு சதை பகுதியை சாப்பிடுவது தான் ருசி அதை போல் தான் வாழ்க்கையும், மிகவும் கஷ்டப்பட்டால் தான் வாழ்க்கையில் சிறிய அளவு சந்தோஷம் கிடைக்கும் என்றும், கேட்பதற்கு கொஞ்சம் மொக்கையாகத் தான் இருக்கும் இருந்தாலும் கேட்டுக்கோங்க என்று க்யூட்டாக கூறியுள்ள வீடியோவை ஜனனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications