பிக் பாஸ் தமிழ்5: தான் ஜெயித்த பணத்தில் ராஜு செய்த முதல் செயல்.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: ஐந்தாவது சீசனில் வெற்றியாளராக வாகை சூடி இருக்கும் ராஜு, தான் வெற்றி பெற்ற பணத்தில் செய்த செயல் ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
சும்மாவே ராஜுவை கொண்டாடும் ரசிகர்கள் தற்போது அவருடைய செயலை தெரிந்து கொண்டதும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவால் கிடைத்த வெற்றி
பெரும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு ரசிகர்கள் அதிக படியில் ஆதரவு கொடுத்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் அவருக்கு சக போட்டியாளர்களை விட பெரிய அளவில் வாக்கு கிடைத்ததால், இவர் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இறுதி போட்டியில் மாற்றம்
தன்னுடைய வெற்றிக்கு ஒவ்வொரு முறையும் பல தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றியை தொட்டு தழுவி இருக்கும் ராஜுவுக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் குவிந்து வருகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள் என்றால் பிரபலங்களும் சலிக்காமல் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வழக்கமாக நடைபெறும் பிக் பாஸ் கிராண்ட் பினாலே தற்போது வித்தியாசமாக நடைபெற்றாலும் இவருக்காக இந்த நிகழ்ச்சியை நேற்று பல ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ரசிகர்களின் கொண்டாட்டம்
ராஜுவின் வெற்றியை தங்களுடைய வீட்டில் ஒருவரின் வெற்றியை போன்று அனைவரும் சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கடைசி நேரத்தில் ராஜு ஜெயித்தாரா?? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பல ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர் .இறுதியில் ரசிகர்களின் விருப்பமே நிறைவேறியது. அதனால் தற்போது வரைக்கும் ரசிகர்கள் பலர் ராஜுவின் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video

ராஜுவின் வியக்கவைத்த செயல்
ராஜூ கோப்பையோடு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அதிகமாக மகிழ்ச்சியில் இவருடைய வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இவர் வெற்றி பெற்றதற்காக இவருக்கு வழங்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில் இவர் தன்னுடைய அம்மாவுக்காக முதல்முறையாக ஒரு புடவை வாங்கியுள்ளாராம். அது மட்டுமல்லாமல் அவருக்கு தெரிந்த ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு பண உதவியையும் செய்துள்ளாராம். இது அவருடைய நண்பர்களால் பகிரப்பட்டு வருகிறது .இதை தெரிந்ததும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரை கொண்டாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications