ராணவ் விபத்து பற்றி பிக்பாஸிலிருந்து போன் பண்ணி சொன்ன வார்த்தை! வருத்தமா இருக்கு! அப்பா சந்துரு ஓபன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராணவ்க்கு நேற்று டாஸ்க் விளையாடும் போது கையில் அடிபட்டது பற்றி அவருடைய தந்தை சந்துரு உருக்கமாக பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது. இப்ப வரைக்கும் இணையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராணவிற்கு நடந்த விபத்து பற்றி தான் பேசப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து ராணவ்வை சில போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்து வந்த நிலையில் நேற்று அவருக்கு அடிபட்டு வலியில் துடித்த போது கூட அவருக்கு சிலர் உதவி செய்யாமல் அலட்சியம் செய்திருந்தனர். இது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதோடு இதுவரைக்கும் இருந்ததை விட இப்போது ராணவிற்கு அதிகமான ஆதரவு ஏற்பட தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்தனர். அதில் ராணவ், மஞ்சரி, ரியான், வர்ஷினி, ரியா போன்றோர் கலந்து கொண்டனர்.
அதில் மூன்று போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்ட நிலையில் மூன்று போட்டியாளர்கள் மட்டும் உள்ளே இருக்கிறார்கள். இப்படியான நிலையில் தான் நேற்று ராணவிற்கு விபத்து ஏற்பட்டது. இது பற்றி அவருடைய தந்தை கராத்தே சந்துரு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதில், எங்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார். அதில் மூத்த மகன் தான் ராணவ். அவர் ஸ்கூல் படிக்கும்போது நல்லா படிப்பார். அதனால் அவரை வழக்கறிஞராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுபடி அவரை படிக்க வைத்தேன் ஆனால் ராணவிற்கு பிடித்தது சினிமா தான். அதனால் நான் அவருடைய இஷ்டத்திற்கு விட்டுவிட்டேன்.
காரணம் ராணவ் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். ஆரம்பத்தில் எந்த பின்புலமும் இல்லாமல் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இப்போதுதான் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். அந்த திரைப்படம் இன்னும் இரண்டு மாதத்தில் வெளியே வர இருக்கிறது. இந்த நிலையில் ராணவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அவர் போகிறேன் என்று சொன்னபோது கூட சிலர் இந்த நேரத்தில் போகணுமா என்று கேட்டதற்கு நான் ராணவ் எடுக்கும் முடிவு சரியா இருக்கும் அதனால் அவர் இஷ்டப்படி செய்யட்டும் என்று சொல்லிவிட்டேன்.

ஏற்கனவே நான்கு வருடமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ராணவ் காத்திருந்தார். அதனால் அவர் இஷ்டப்படி இருக்கட்டும் என்று நினைத்தேன். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன பிறகு வீட்டில் எல்லோரும் சேர்ந்து இருந்து நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் அப்படி பார்க்க முடியவில்லை.
காரணம் நிகழ்ச்சியில் ராணவ் சென்ற பிறகு உள்ளே பலர் அவரை ஒதுக்கி வைக்கிறார்கள். சக போட்டியாளர்கள் மூலமாக அவன் படுற கஷ்டத்தை எங்களால் பார்க்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. விளையாட்டு என்றால் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் சிலர் அதில் வன்மத்தை கக்குகிறாங்க. சில நாள் நாங்கள் அந்த நிகழ்ச்சியை டிவியில பாக்குறது இல்ல.
என் மனைவி அழுதுட்டே டிவியை ஆஃப் பண்ணிடுறாங்க.நேற்று முன்தினம் ராணவிற்கு விபத்து நடந்திருக்கு என்று மட்டும் எங்களுக்கு பிக் பாஸில் இருந்து போன் பண்ணி சொன்னாங்க. ஆனால் என்ன நடந்தது என்று விபரமாக எதுவும் சொல்லல. அதற்குப் பிறகு எங்க ஃபேமிலி டாக்டர் வைத்து பிக் பாஸ் டீமிடம் பேச வைத்தோம். அவர் சொன்ன பிறகுதான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனாலும் இப்ப வரைக்கும் வீட்டில் எல்லோருக்கும் படுத்தா சரியா தூக்கம் வரமாட்டேங்குது. காரணம் இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிற ஈவிபி செட் இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் தீம் பார்க் இருந்தது. அப்போ நாங்க பத்து வருஷத்துக்கு முன்பு குடும்பத்தோடு போயிருந்தோம்.
அப்போ ராணவ் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தான். அங்கிருந்த ஒரு ராட்டினத்தில் ராணவ் சுற்றிக் கொண்டிருந்தபோது அந்த ராட்டினம் ஒரு மாதிரி சரிஞ்சிடுச்சு. அப்போ ராணவ் நூலிழையில் உயிர் தப்பினான். நாங்க உடனே அந்த தீம் பார்க் நிர்வாகத்திடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லைன்னு சொன்னோம் அவர்கள் அதை கண்டுக்கல.

என் பையன் தப்பிச்சுட்டான் ஆனாலும் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடந்துட கூடாதுன்னு தான் நாங்க லோக்கல் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். அப்போ போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கல. ஆனால் அதிலிருந்து சில நாட்களிலேயே அந்த இடத்தில் ஒரு பெரிய விபத்து நடந்து வட மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உயிரை விட்டுட்டாங்க.
அதற்கு பிறகு தான் அந்த தீம் பார்கை இழுத்து மூடிட்டாங்க. அதனால மகன் பிக் பாஸ் போறப்பவே எங்களுக்கு பழைய ஞாபகம் வந்து போச்சு. ஆனாலும் அவன் பாசிட்டிவ்வான எண்ணங்கள் உடையவன் என்கிறதுனால நாங்க மனசை தேத்திக்கிட்டு அனுப்பி வச்சோம். இப்போ அதே இடத்தில் ராணவிற்கு மீண்டும் விபத்து நடந்திருப்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துது என்று ராணவ் தந்தை பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications