பிக் பாக்ஸில் அந்த இரவு நடந்தது இதுதான்! அன்ஷிதாவிடம் நான் ஓப்பனா சொல்லிட்டேன்! ஆனந்தி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்று எலிமினேஷன் ஆனந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அன்ஷிதாவோடு இருந்த நட்பு மற்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிகள் 18 போட்டியாளர்கள் இருந்தனர். பிறகு 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்திருந்தனர். ஆனால் இப்பொழுது உள்ளே 13 போட்டியாளர்கள் தான் இருக்கிறார்கள்.

bigg boss tamil 8 bigg boss 8 8

இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு வர இருக்கிறது. 70 நாட்களை இந்த நிகழ்ச்சி தாண்டி இருக்கும் நிலையில் இதில் போட்டியாளராக சென்று சில வாரங்களிலேயே வெளியே வந்த ஆர்ஜே ஆனந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் ஜெயிக்க வேண்டும் என்றால் வெளியே இருக்கும் மக்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதாது உள்ளேயும் அரசியல் இருக்கிறது.

உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சப்போர்ட் செய்தால் மட்டும் தான் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருக்க முடியும். கடந்த வாரத்தில் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்ற போது தீபக் பவித்ராவின் பாத்திரத்தை எட்டி உதைத்தார். அதனால் அதிலிருந்து தண்ணீர் கொட்டியதால் தான் ரஞ்சித் சார் தலைவராக மாறினார்.

அவர் அதே நேரத்தில் தீபக் ரஞ்சித் சார் பாத்திரத்தை தட்டி விட்டு இருந்தால் பவித்ரா தலைவியாக மாறி இருப்பார். இதுபோலத்தான் உள்ளே சிலருடைய சப்போர்ட் இருந்தால் தான் பெஸ்ட் பர்பாமன்ஸ் என்று அவார்ட் கூட வாங்க முடியும். இல்லை என்றால் எதுவும் செய்யவில்லை என்று எல்லோரும் சொல்லிவிடுவார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நான் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு முன்பு யாரிடமும் அதிகமாக அட்டாச் ஆக கூடாது என்று நினைத்துதான். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது யாரோடும் நட்பாக இருக்கக் கூடாது என்று நினைத்து தன் போனேன் ஆனால் உள்ளே போன பிறகு சிலரோடு எனக்கு நட்பு ஏற்பட்டது.

அதிலும் ஒரு சில இடங்களில் அன்ஷிதா எனக்கு சப்போர்ட் செய்வது. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் ஒரு நாள் இரவு அன்ஷிதாவிடம் நான் ஓப்பனாகவே நீ எனக்காக சப்போர்ட் செய்வது எனக்கு பிடித்திருக்கிறது நான் இந்த வீட்டிற்கு வரும்போது யாரோடும் நெருங்கி பழகக் கூடாது என்று நினைத்தேன், நட்பு என்ற ஒரு சூழ்நிலை உருவாகி விட்டால் அவர்களோடு எதிர்த்து விளையாட முடியாது.

அதே நேரத்தில் நாம் தனியாக இருக்கும்போது தான் மற்றவர்களோடும் போட்டியிட முடியும் என்று நான் யோசித்தேன். ஆனால் நீ எனக்காக ஒவ்வொரு இடத்திலும் நிற்கும் போது உன்னோடு போட்டி போடுவதற்கு எனக்கு மனசு வரல என்று சொல்லி இருந்தேன். அதுபோல நான் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு என்னுடைய நண்பர்கள் ராப் பாடகர்களிடம் கொஞ்சம் தள்ளி இரு என்று அட்வைஸ் செய்து அனுப்பினார்கள்.

ஆனால் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது ஜெப்ரியை பார்க்கும்போது எனக்கு அவரிடம் பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் எந்த போட்டியாளர்களையும் எனக்கு இதற்கு முன்பு தெரியாது, அதனால் நான் உள்ளே போய் அவர்களைப் பார்த்தது தான் உண்மை என்று நினைக்கிறேன்.

ஆனாலும் ரஞ்சித் சார் இன்னும் சில இடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாரோ அவருடைய உண்மை இன்னும் வெளியே வரவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. அதற்கு காரணம் அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் கூட சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக சொல்லவில்லை. ஒருவேளை இதுதான் அவரா? என்ற சந்தேகமும் வருகிறது. ஆனால் இதை ஏன் அவர் இன்னும் சொல்லாமல் இருக்கிறார் என்ற கேள்விகளும் எனக்குள் வருகிறது என்று அந்த பேட்டியில் ஆனந்தி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+