பிக் பாஸ் 8: உப்பு போட்டு சாப்பிடுறீங்களா? கேட்ட தர்ஷிகா! மனம் நொந்த சிவகுமார்.. கோபத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நவம்பர் 22ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் சுவாரசியமாக எதுவும் செய்யவில்லை என்று போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்ட சிவக்குமாரிடம் தர்ஷிகா "நீங்க சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டீங்களா?" என்று கேட்டிருக்கிறார். இது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஒரு சில நாட்களில் சில போட்டியாளர்கள் எதிர்பாராமல் செய்யும் செயல்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டப்படுகிறது. அஜாக்கிரதை மற்றும் அலட்சியமாக செய்யும் சில செயல்கள் ரசிகர்களை கொந்தளிக்க வைத்து விடுகிறது. அந்த மாதிரி தான் ஆரம்பத்தில் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தர்ஷிகா இன்று பேசிய வார்த்தை பலருடைய விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தர்ஷிகா சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாகவும் , இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு திறமை இருந்தாலும் எந்த சீரியலிலும் தனக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று விஜய் சேதுபதி முன்பு கெத்தாக பேசியிருந்தார்.
முதல் இரண்டு வாரத்தில் அவர் விளையாட்டும் சிறப்பாக இருந்தது. எல்லா டாஸ்க்களிலும் அதிகமாக இவர் வெற்றி பெற்றார். அதிலும் போட்டி போட்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று இவருடைய வேகமும் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்து இவருடைய விளையாட்டு போக்கு மாறி இருக்கிறது.
அதே நேரத்தில் போட்டியாளர்கள் சரியாக கண்டெண்ட் கொடுக்கவில்லை என்று பிக் பாஸ் செம காண்டில் இருக்கிறார் போல. இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்குள் புகைச்சல் மற்றும் பிரச்சனையை வர வைக்க வேண்டும் என்பதற்காக புது டாஸ்க் வைத்திருக்கிறார். அதாவது இந்த வாரத்தில் நடந்த ராஜா ராணி டாஸ்கில் யாருடைய பர்பாமென்ஸ் சரியில்லை என்று தேர்வு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
பெண்கள் அணியில் சௌந்தர்யாவை தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆண்கள் அணியில் சிவகுமாரை தேர்வு செய்து இருக்கிறார்கள். அதை தொடர்ந்து இந்த இரண்டு போட்டியாளர்கள் மீது உங்கள் மனதில் இருக்கும் வார்த்தைகளை தயவு தாட்சனை இல்லாமல் திட்டுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
இதுதான் இப்போது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் இவ்வளவு வன்மம் மனதிற்குள் வைத்து கொண்டு இருந்தார்கள் என்று பார்க்கும் ரசிகர்கள் அதிசயப்பட வைக்கும் அளவிற்கு எல்லா போட்டியாளர்களும் சிவகுமார் மற்றும் சௌந்தர்யா மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை கருத்து என்கிற பெயரில் கொட்டுகிறார்கள்.

அதிலும் தர்ஷிகா சிவகுமாரிடம் நீங்க இந்த வீட்டிற்குள் வந்த பிறகு எல்லாரையும் அக்கா, தம்பி, தங்கை என்று உறவு வைத்துக்கொண்டு அழைத்துக் கொண்டிருக்கிறீர்களே தவிர உங்களுடைய நிஜ முகத்தை காட்டவில்லை. நீங்கள் உண்மையாக சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பிடுவீங்களா என்று எனக்கு சந்தேகமா இருக்கிறது.
உங்க சாப்பாட்டில் உப்பு போதவில்லை என்றால் சொல்லுங்கள் எங்கள் வீட்டில் இருந்து உப்பு அனுப்பி விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட சௌந்தர்யா மற்றும் சிவக்குமார் இருவரும் சிரித்துக்கொண்டிருப்பது போன்று ப்ரோமோவில் இருக்கிறது.
இதனால் ஏற்கனவே போட்டியாளர்கள் சொல்லி வைத்துவிட்டு இப்படி திட்டுகிறார்களா? அல்லது நிஜத்தில் தான் இவர்கள் பேச இதையெல்லாம் கண்டு கொள்ளக்கடாது என்று சிவகுமார் மற்றும் சௌந்தர்யா அமர்ந்திருக்கிறார்களா? என்ற சந்தேகமும் எழுகிறது. தர்ஷிகா சிவகுமாரிடம் நடந்து கொண்டது சரி என்று நீங்க நினைக்கிறீங்களா? இல்லை தவறு என்று நினைக்கிறீர்களா? உங்க கருத்தை தட்டி விடுங்க பாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications