பிக் பாஸ் 8: ஒரு டாஸ்க்கால் மாறிப்போன எலிமினேஷன் லிஸ்ட்.. இந்த வாரம் வெளியேற்றம் இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் ஆறாவது போட்டியாளராக பெண் போட்டியாளர்தான் வெளியேறப் போகிறார் என்று கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். அதில் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்கள்தான். அதைத்தொடர்ந்து 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் களமிறக்கப்பட்டனர்.

எல்லோரும் நிகழ்ச்சிக்குள் வருவதற்கு முன்பு நாங்கள் நிகழ்ச்சியை சுவாரசியமாக்க போகிறோம், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு போவோம், கலகலப்பாக மாற்றுவோம் என்றெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர இந்த வீட்டிற்குள் பெரிய அளவில் சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை.
இதற்கு முந்தைய சீசன்களை நன்றாக பார்த்து கரைத்து குடித்துவிட்டு இந்த சீசனில் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி பிரச்சனை செய்தால் ப்ரோமோவில் வருவோம் என்று அதற்காக அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட பெரிய போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த ரவீந்தர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து அர்னவ் வெளியேற்றப்பட்டிருந்தார்.
அடுத்ததாக தர்ஷா குப்தா, சுனிதா, ரியா என்று 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். தீபாவளி வாரத்தில் நோ எவிக்ஷன் என்று சொல்லிவிட்ட நிலையில் இந்த வாரத்தில் ஆறாவது போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிறார். அதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி வாக்குகளின் அடிப்படையில் சிவக்குமார் தான் குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார். அவரை தொடர்ந்து சாச்சிகா இடம் பிடித்திருக்கிறார். ஆனால் இந்த வாரத்தில் ஆண்கள் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கில் வெற்றி பெற்று இருக்கின்றனர். அந்த டிக்கெட்டை வைத்து சிவகுமாரை ஆண்கள் சேவ் பண்ணி விடுகிறார்கள்.
இவர் ஒருவர் சேவ் ஆகி விடுவதால் எலிமினேஷனில் மாற்றம் என்று நடைபெற்று இருக்கிறது. அதன் காரணமாக இந்த வாரம் சாச்சிகா தான் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சுனிதா மற்றும் சாச்சிகா தான் குறைவான வாக்குகளில் இருந்தனர்.
அப்போது கூட சாச்சிகா வெளியேறுவதற்கு வாய்ப்பு இருந்தாலும் சுனிதா யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றப்பட்டார். ஆனால் மீண்டும் சாச்சிகா இந்த வாரத்தில் வாக்குகளின் கடைசி இடத்தில் இருப்பதால் அவர்தான் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications