சௌந்தர்யா மேல இருந்த மொத்த மரியாதையும் போச்சு.. பிக் பாஸுக்குள் நடந்தது இதுதான்! ஆர்ஜே ஆனந்தி ஓபன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆர் ஜே ஆனந்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சௌந்தர்யா மீது இருந்த மொத்த மரியாதையும் போய்விட்டது என்று கூறி இருக்கிறார். அதற்கான காரணம் பற்றி பேட்டி ஒன்றில் அவர் பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து சௌந்தர்யாவிற்கு அமோகமான ஃபேன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இது பிஆர்டீம் செட் பண்ணியது என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் எந்த பிரமோவிலும் சௌந்தர்யாவின் ரியாக்ஷனை பாராட்டும் கமெண்ட்டுகள் அதிகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஒரு சில நேரங்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் சௌந்தர்யா செய்யும் செயல் க்யூட்டாக இருந்தாலும், சில நேரங்களில் அவர் செய்யும் செயலும் பேசும் வார்த்தைகளும் பார்க்கும் ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறது. அதிலும் ராணவ்க்கு நேற்று அடிபட்டபோது சௌந்தர்யா நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
என்னதான் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு மனிதன் அடிபட்டு வலியில் துடிக்கிறார் அப்போது கூட இவர் ஏமாற்றுகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு ராணவும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்திருக்கிறார், மூன்று வாரங்களுக்கு அவரால் எதுவும் செய்ய முடியாது என்று பிக் பாஸ் சொல்லி இருக்கும் நிலையிலும் ராணவ் நடிக்கிறார் என்று தான் சொன்னது குறித்து மன்னிப்பு கேட்காமல் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கிறார் என்று சௌந்தர்யாவை பலர் திட்டி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு எவிக்ஷனான ஆர் ஜே ஆனந்தி பேட்டி ஒன்றில் சௌந்தர்யா பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த வரைக்கும் சௌந்தர்யா வேறு விதமாக எனக்கு தெரிந்தார், ஆனால் வெளியே வந்து பார்த்த பிறகு தான் அவருக்கு பி ஆர் வேலை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.
அதனால் எனக்கு சௌந்தர்யா மீது இருந்த மொத்த மரியாதையும் போய்விட்டது. சௌந்தர்யா பற்றி நான் பேச விரும்பவே இல்லை என்று அதிருப்தியாக பேசி இருக்கிறார். இது சௌந்தர்யாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் சௌந்தர்யா மற்றும் ஆர் ஜே ஆனந்தி இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் அதிகமான சண்டைகள் நடந்தது.
அதற்குப் பிறகு ஆள் மாறாட்டம் டாஸ்க்கில் சௌந்தர்யா போலவே ஆர் ஜே ஆனந்தி ஒரு நாள் முழுக்க பேசி பழகி நடித்து இருந்தார். இதனால் சௌந்தர்யாவை பற்றி தான் நன்றாக புரிந்து கொண்டதாக ஆர் ஜே ஆனந்தி பேசியிருந்தார். ஆனால் இப்போது அவர் சௌந்தர்யா குறித்து பேசி இருப்பது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
அதுபோல இதுவரைக்கும் வாக்குகளின் அடிப்படையில் முதலிடத்தில் இருந்து வந்த சௌந்தர்யா இப்போது படிப்படியாக கீழே இறங்கி நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறார். அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications