பிக் பாஸில் பாடி ஷேமிங்.. சௌந்தர்யாவின் அத்துமீறல்.. முகம் மாறிய பிக் பாஸ் ஜாக்குலின்.. Bigg Boss 8
சென்னை: இத்தனை நாளும் சவுண்டே இல்லாமல் இருந்த சவுந்தர்யாவுக்கு எதிராக , இணையவாசிகள் அதிருப்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.. இதுக்கு சவுந்தர்யா எப்போதும் போல் விளையாடாமல் அமைதியாகவே இருந்திருக்கலாமே? என்றும் கருத்துக்கள் கிளம்பி வருகின்றன.
தற்சமயம் பிக் பாஸ் வீடு, நட்சத்திர ஓட்டலாக மாறியுள்ளது.. ஆண் போட்டியாளர்கள் ஓட்டல் ஊழியர்களாகவும், பெண் போட்டியாளர்கள் விருந்தினர்களாகவும் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்...

அப்போது, மாடலாக ஓட்டலில் வந்து தங்கியிருக்கம் சவுந்தர்யா, முத்துவிடம் சப்பாத்தி கேட்டார். பிறகு, "நான் எப்பவுமே ஒரு சப்பாத்திதான் சாப்பிடுவேன், அதுவும் உப்பாக இருந்தால் நானும் அவங்களை மாதிரி ஆகிடுவேன்.. இவ்வளவு உப்பை சாப்பிட்டால் நான் மாடலாக இருக்க முடியாது.. அவரை மாதிரி எனக்கும் மூஞ்சி புஸூ புஸுன்னு ஆகிடும் என்றார். " என்று ஜாக்குலினை பார்த்து சொன்னார்.
ஜாக்குலின்: உடனே ஜாக்குலின் முகம் சட்டென மாறிவிட்டது, "காமெடிக்கு கூட இப்படியெல்லாம் சொல்லாதே.. கடுப்பாகுது.. இனிமே அப்படி பாடி ஷேமிங் பண்ணாதே" என்றார்.. ஜாக்குலின் இப்படி சொன்னதுமே சவுந்தர்யா பதிலுக்கு வரிந்துகட்டிக் கொண்டு வந்து பதிலளித்தார்.. நான் பண்ணாதான் உனக்கு குத்தமா? என்று சவுந்தர்யா சொல்ல, "கொஞ்சம் அட்டன்டிவா இரு சவுந்தர்யா" என்று ஜாக்குலின் அட்வைஸ் செய்தார்..
மிகப்பெரிய சண்டையாக வெடித்திருக்க வேண்டிய இந்த விஷயம், பிக்பாஸ் நோ நாமினேஷனுக்கான டாஸ்க் தந்துவிடவும், பிரச்சனை பெரிதாகவில்லை.. ஆனால், ஜாக்குலினை ஆரம்ப நாளிலிருந்தே செளந்தர்யா கிண்டலடித்து வருவதை பலரும் கவனித்து வருகிறார்கள்.. "மூஞ்சியை பார்த்தால் முட்டை போண்டா, பரோட்டோ" என்றெல்லாம் கிண்டலாக பேசியே ஜாக்குலினை சௌந்தர்யா காயப்படுத்தியிருந்தார்.
பொறாமை: அதேபோல, ஜாக்குலினை "மலமாடு" என்று சௌந்தர்யா கூறியிருந்த நிலையில், அதற்கான கண்டனத்தையும் வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். இப்போது, மீண்டும் பாடிஷேமிங் செய்துள்ளதை ரசிகர்கள் ஏற்கவில்லை. மேலும், உருவகேலியை தங்களாலும் ஏற்க முடியாது என்பதுபோல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே சௌந்தர்யாவுக்கு எதிராக மாறியிருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், சத்தமே இல்லாமல் இருப்பதாக தன்னை பற்றி விமர்சனங்கள் வருவதை கண்டதால், இப்போது சத்தத்தை ஜாக்குலின் பக்கம் வேண்டுமென்றே செளந்தர்யா திருப்பியிருப்பதாக கூறுகிறார்கள்...
ஜாக்குலின்மீது செளந்தர்யாவுக்கு அப்படி என்னதான் பொறாமையோ? வெறும் அழகாக மட்டும் இருந்தால் போதுமா? பிறரிடம் எப்படி பேச வேண்டும் என்றுகூட தெரியவில்லையே? இதுக்கு ஏற்கனவே இருந்த மாதிரி சவுண்டே இல்லாமல் செளந்தர்யா இருந்திருக்கலாமே என்றெல்லாம் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கண்டிப்பு: அதுமட்டுமல்லாமல், எல்லா விஷயத்தையும் முகத்துக்கு நேரே கேள்வி கேட்கும் விஜயசேதுபதி, இந்த வாரம், செளந்தர்யாவையும் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications