Bigg Boss: பிக் பாஸ்ஸை விட்டு வந்த திவாகர் செய்த வேலையை பாத்தீங்களா? அலப்பறை தாங்கலையே!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் பலரின் வெறுப்புக்கு ஆளான போட்டியாளர் "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர், ஒருவழியாக கடந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்ட பின்னரும், தனது அலப்பறையையும், தில்லாலங்கடி வேலைகளையும் கொஞ்சமும் குறைத்தபாடில்லை. அவர் வெளியே வந்து செய்திருக்கும் லூட்டிகள், இப்போது இணையத்தில் தீயாகப் பரவி, ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறது.

வெளியே வந்ததும் மீண்டும் ரீல்ஸ்
திவாகர் வெளியேற்றப்பட்டதும், அவரைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்களில் சிலர், "பழையபடி நடித்துக் காட்டுங்கள்" என்று கேட்கவே, அவர் சற்றும் யோசிக்காமல் மீண்டும் அதே அலப்பறை நடிப்பைக் காண்பித்து அலப்பறை செய்திருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.
ரசிகர்களின் கேள்வி
இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், "இவர் என்ன திருந்தல?", "பாவம், இன்னும் பிக்பாஸ் வீடுனு நினைச்சுட்டு இருக்காரு போல", என்று சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர். உண்மையில், பிக்பாஸ் வீட்டிற்குள் திவாகரின் வீடியோவை எடிட் செய்த எடிட்டர் தான் ரொம்பவும் பாவம் என்றுப் பல ரசிகர்கள் பரிதாபத்தைக் கொட்டி வருகின்றனர். காரணம், திவாகர் வீட்டிற்குள் வேலை செய்தாரோ இல்லையோ, கேமரா முன்பு ரீல்ஸ் செய்வதையே முழு நேரப் பணியாக வைத்திருந்தார். அவரது காட்சிகள் அனைத்தையும் கட் பண்ணி, நிகழ்ச்சிக்காகத் எடிட் செய்வது பெரிய வேலையாக இருந்திருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஜய் சேதுபதியை கலாய்க்க வைத்த செயல்
திவாகர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை, இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடக்காத அளவுக்குப் பல அசிங்கங்கள் நடந்ததாக ரசிகர்கள் கருதினர். அதற்கு முக்கிய காரணம், இவர் செய்த அலப்பறை தான். பெண் போட்டியாளர்களிடம் காதல் கண்டண்டா கொடுக்கிறேன் என்று அவர்களுடைய தலைமுடியை முகர்ந்து பார்த்து வாசமா இருக்கு என்று சொல்வது, கை குலுக்க கொடுத்தால் கைகளைப் பிடித்து நசுக்குவது. எல்லாருக்கும் மனசுக்குள் ஆசை இருக்குமே.. என்று மன்மதன் போல பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பார்ப்பதற்கு ரொம்பவும் கிரிஞ்ச் ஆக இருந்தது.
கடந்த வாரத்தில் திவாகர், "நான் தான் இனி அடுத்து தமிழ் சினிமாவைக் காப்பாற்றப் போறேன். ரஜினி, விஜய் அஜித்துக்கு அடுத்து நான் தான் " என்று கேமரா முன்பு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கேமராவானது திவாகரின் முகத்திலிருந்து விலகி, வேறு திசையில் திரும்பிக் கொண்டது. பிக்பாஸ் வரலாற்றில், ஒரு போட்டியாளரின் அலப்பறையால் கேமராவே முகத்தைத் திருப்பிக் கொண்ட ஒரு சம்பவம் திவாகருக்கு மட்டும்தான் நடந்தது.
கேமரா விலகியது, "நீதான் இந்த வாரம் வெளியேறப் போகிறாய்" என்று நிகழ்ச்சி குழு சார்பில் திவாகருக்குக் கொடுக்கப்பட்ட சிக்னல் போலவே இப்போது தெரிகிறது என்றுப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "பிக்பாஸ் வீட்டிற்குள் எத்தனை கேமரா இருக்கு என்று திவாகருக்குத் தான் தெரியும்" என்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி கலாய்த்ததற்குக் காரணம், திவாகர் கேமரா எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று தனியாகப் பேசி, தனது நடிப்புத் திறமையைக் காண்பிப்பதைத் தான்!
திவாகர் வெளியே வந்த பிறகும் அவரது இந்த அலப்பறை தொடர்வது, "எல்லாமே பப்ளிசிட்டிக்காகத் தான்" என்பதை மீண்டும் நிரூபிப்பதாகவே உள்ளது. திவாகரின் இந்தத் தொடர்ச்சியான வீடியோ வெளியீடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பாஸ்?
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications