Bigg Boss: பிக் பாஸில் இருந்து கண்ணீரோடு வெளியே போன விஜய் சேதுபதி இந்த மனுஷனுக்கே இந்த நிலைமையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தான் கண்ணீரோடு இங்கிருந்து போகிறேன் என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 60 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த சீசனில் இன்னும் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று ஒரு ரசிகர்களாலே கணிக்க முடியாத சூழ்நிலைதான் இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் ஒரு சில வாரங்களிலேயே இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வேண்டும் என்று ஒரு சில போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் அதிகமாக உருவாகி விடுவார்கள். தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருவார்கள் ஆனால் இந்த சீசனில் மட்டும் எந்த போட்டியாளருக்கும் ரசிகர்களால் உறுதியாக சப்போர்ட் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது.

காரணம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்களும், வில்லனாகவும் ஹீரோவாகவும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இவங்க நிஜத்திலே இப்படித்தானா? அல்லது ஸ்கிரிப்ட் படி நடிக்கிறாங்களா? பாஸ் என்ற கேள்விதான் எல்லாருக்கும் வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தாலே பைத்தியமாகிவிடும் என்பது கூட இப்போ சிலருடைய கமெண்ட்ஸாக இருக்கிறது. உள்ளே முக்கோண காதலும் சண்டை சச்சரவு தான் அதிகமாக இருக்கிறது என்று சிலர் அலுத்துக் கொள்கிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் எல்லாம் பார்க்க முடியாத அளவிற்கு கவர்ச்சியாக இருக்கிறது என்றும் புலம்பி வருகிறார்கள். அதற்கு கூட விஜய் சேதுபதி ஆரம்பத்திலேயே பதிலடி கொடுத்திருந்தார். உங்க கையில் தானே ரிமோட் இருக்கிறது? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொண்டு போங்களேன் என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. கடந்த வாரத்தில் நோ எவிக்ஷன் வைத்து விட்டார்கள். அதனால் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி நாளைக்கு தான் ஒரு போட்டியாளரை வெளியேற்றப் போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
காலையில் வந்த தகவலின்படி சான்ரா மற்றும் விஜே பார்வதி இவர்கள் இருவரை தான் இந்த வாரம் வெளியேற்ற போகிறார்கள் என்று கூட சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது சேனல் தரப்பினர்கள் முடிவில் மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
வழக்கம்போல சனிக்கிழமை எபிசோடின் ப்ரோமோ மதியத்துக்கு மேலே தான் வந்தது அதில் முதல் ப்ரமோவிலேயே விஜய் சேதுபதி சோகமாக தான் பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரத்தில் டாஸ்க்கில் ஒரு கிருமி தான் இருந்தார். ஆனால் உள்ளே வந்த கிருமி பல விஷயங்களை செய்திருக்கிறது. இதனால் பலருடைய கேரக்டரே மாறி இருக்கிறது, ஒரு வெள்ளை டப்பாவை வைத்து உள்ளிருக்கும் கிருமிகளை எல்லாம் பிடித்து வெளியே போட வேண்டியதுதான் என்பது போல பேசி இருந்தார்.
அதைத்தொடர்ந்து வந்த இரண்டாவது ப்ரோமோவில் உள்ளே நடந்த சில சம்பவங்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். ஆனாலும் வழக்கம்போல போட்டியாளர்கள் சுற்றி வளைத்து பேச கடுப்பான விஜய் சேதுபதி நான் கண்ணீரோடு வெளியே போறேன் என்று சொல்லியிருந்தார். இது அவர் கலாய்ப்புக்காக சொல்லியிருந்தாலும் நிஜமாகவே இந்த நிகழ்ச்சியை விட்டு போய்டுங்க பாஸ் என்று கூட சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி போன சீசன் போட்டியாளர்களை கேள்விகளால் மடக்கிய விதம் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்தது. அதேபோல இந்த சீசனிலும் சில நேரங்களில் செயல்படுகிறார் ஆனாலும் அவருடைய பேச்சை உள்ளிருக்கும் போட்டியாளர்கள் யாரும் தான் கண்டு கொண்டது போல தெரியவில்லை. அதனாலேயே இவருக்கு இந்த நிகழ்ச்சி செட்டாகாது என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications