நீ லெஸ்பியனா? தனக்கு வந்த கமெண்ட் குறித்து ஜாக்குலின் கொடுத்த பதிலடி.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: தொகுப்பாளினியான ஜாக்குலின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கிறார். அவர் போடும் போஸ்ட்களுக்கு நீ லெஸ்பியனா என்று ஒருவர் கமெண்ட் கொடுத்து இருந்த
நிலையில் அதற்கு ஜாக்குலின் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதை சரியாக பயன்படுத்துவோர் குறைவாக தான் இருக்கிறார்கள். அதனை தவறான வழியில் பயன்படுத்துவர்களும், அதுபோல தங்களுடைய மனதில் இருக்கும் வன்மத்தை கொட்டுபவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் சினிமா பிரபலங்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் போடும் போஸ்ட்களுக்கு வன்மமான கமண்ட்டுகள் கொடுப்பதற்காகவே ஒரு சிலர் பேக் ஐடி வைத்திருக்கிறார்கள். ஒரு சிலர் ஒரிஜினல் ஐடியில் கூட அடுத்தவர்கள் மீது
இருக்கும் பொறாமை கோபத்தை கொட்டுவதையும் பார்க்க முடிகிறது.
முகம் காட்டாமல் சிலர் பேசும் வார்த்தைகளால் அதைப் பார்ப்பவர்களின் மனதோ அல்லது அவர்களுடைய உறவினர்களின் மனதோ எவ்வளவு கஷ்டப்படும் என்று சிலர் யோசித்துப் பார்ப்பதில்லை. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜாக்குலின் குறித்து சிலர் தவறான கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
ஜாக்குலின் கல்லூரி பருவத்திலேயே விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிவிட்டார். அதற்கு பிறகு ஒரு சில சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் சில வருடங்களாக அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெறவில்லை. அதுபோல சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் நிலைத்து இருந்தார். அவருடைய வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் ஜாக்குலின் தொகுப்பாளினியாக இருக்கும் போது ஒரு சிலர் ஜாக்குலின் குரல் ஆம்பள குரல் போல இருக்கிறது என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
சிலர் ஜாக்குலின் பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் ஒருவர் ஜாக்குலின் அவருடைய தோழிகளோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்ததற்கு "நீ லெஸ்பியனா எப்போதும் பெண்களோடு போஸ்ட் போடுவது ஏன்" என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் ஜாக்குலின் பேசும்போது எப்போதும் மூணு பிரெண்ட்ஸ் ஒன்றாக போட்டோ போஸ்ட் போடும் போது அப்படித்தான் கமெண்ட் போடுவார்கள். நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நாம் யோசிப்பதற்குள்ளேயே இன்னொருவர் ஒரு விஷயம் கூறும்போது நீ அப்படித்தான் யோசிப்பியா? ஏன் அப்படி ஒரு மோசமான கமெண்ட் என்று எனக்குத் தோன்றும்.
நான் என்னுடைய பிரண்டோட போட்ட புகைப்படத்திற்கு அப்படித்தான் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். அந்த கமெண்ட்டை பார்க்கும்போது பைத்தியமாடா நீ அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷன் இருக்காரு என்று நினைப்பேன். ஆனால் இதுபோல கமெண்ட் போட்டு அவர்களுடைய மனதில் இருக்கும் அழுக்கை வெளியே கொட்டுகிறார்கள். அதை யோசித்து நாம் ஏன் நம்முடைய வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கடந்து போய் விடுவேன் என்று அந்த பேட்டியில் ஜாக்குலின் பேசியிருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications