எங்கே சென்றாலும் மாலை போடுவதற்கு ஆளை கூட்டிட்டு தான் போறீங்களா?அசீமை கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் எந்த இடத்திற்கு போனாலும் ஒரே நபர் தொடர்ந்து அவரோடு ரசிகராக செல்வதை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அசீம் ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து சில நபர்கள் மட்டுமே அவருக்கு மாலை இட்டு வருகிறார்கள் என்று நெட்டிசன்கள் சில புகைப்படங்களை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் அசீமிருக்கு அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முடிவடையாத சண்டைகள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து பல வாரங்கள் ஆன நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய புகைச்சல் இன்னும் சமூக வலைத்தளத்தில் முடிவே இல்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு சிலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பேட்டி கொடுத்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் தான் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது என்றால் வெளியேயும் அது தொடர்ந்து வருகிறது.

பின் தொடரும் அதே ரசிகர்கள்
குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமனுடைய ரசிகர்கள் அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருவருடைய ரசிகர்களும் மாறி மாறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரி தான் தற்போது டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான முறையல்ல என்று விக்ரமனுடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மக்களுடைய தீர்ப்பு தான் அசீம் ஜெயித்தது என்று அசீமுடைய ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அசீம் எங்கே சென்றாலும் குறிப்பிட்ட இரண்டு ரசிகர்கள் மட்டும் தொடர்ந்து அசீமோடு எல்லா கூட்டங்களிலும் இருக்கின்றனர் என்பதை நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் கேள்விகள்
சமூக வலைத்தளத்தில் தற்போது அசீம் தான் பிக் பாஸில் ஜெயித்த பணத்தில் 25 லட்சத்தை கொரோனா காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கொடுக்க இருப்பதாக கூறியிருந்தார். அது எப்படி முடியும் ஏற்கனவே அசீமிருக்கு கிடைத்தது 35 லட்சம் தான் அதிலும் அவருக்கு ஜிஎஸ்டி எல்லாம் போக கிடைக்கும் தொகையில் எப்படி 25 லட்சத்தை அவர் ஏழை குழந்தைகளுக்கு கொடுப்பார் என்று சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கலாய்த்து கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அசீமுடைய புகைப்படம் அவர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக இருக்க அதிகமான மீம்ஸ் வெளியிட்டு அசீமை கலாய்த்து வருகிறார்கள்.

பின் தொடரும் நபர்
நெட்டிசன்கள் ஒரு சிலர் எங்கே போனாலும் மாலை போடுவதற்கு ஆளோட தான் போவீங்களா அசீம் என்று கலாய்த்து கொண்டிருக்க, இதில் என்ன தவறு இருக்கிறது ரசிகர்கள் என்றால் எல்லா இடத்திற்கும் போக தானே செய்வார்கள் என்று அசீமுடைய ரசிகர்களும் சப்போர்ட் கொடுக்க, தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நபர் இதுவரைக்கும் அசீம் கலந்து கொண்ட அனைத்து இடங்களிலும் இருப்பது தற்போது அதிகமாக சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications