இருக்கு இன்று குறும்படம் இருக்கு! கமல் முன்னிலையில் உடைய போகும் உண்மைகள் யாருக்கு சாதகம் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோட்டில் குறும்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக் பாஸில் இன்று 48வது நாளில் முதல் ப்ரோமோவிற்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் கிடைத்திருக்கிறது.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த கமல் இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவாரா? என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கெத்தாக கமல் வந்திருக்கிறார்.

நீதிமன்ற டாஸ்க்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய சனிக்கிழமை எபிசோடுக்காக ரசிகர்கள் பலர் எப்போது ப்ரோமோ வரும் என்று ஆர்வத்தோடு காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்தில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்ற போது பலர் நேர்மையாகவும் ஒரு சிலர் தங்களுடைய சுய கோபதாபங்களை டாஸ்க்கில் காட்டிக் கொண்டு விளையாடி வந்ததை குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இன்று கமல் யாருக்கு சாதகமாக பேசப்போகிறார்? யாருக்கு அறிவுரை கூறப் போகிறார் என்று கமலுடைய பஞ்சாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவ்ளோ நல்லவங்களா
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் "நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. இந்த வாரத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் குற்றம் செய்யப்பட்டவர் யார் என்று தெரியாமல் விசாரித்து, தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. குற்றம் செய்தவர் யார் என்று நிஜமாகவே தெரியாதா? இல்லை தெரிஞ்சிக்க விரும்பவில்லையா? இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே? இவங்க இவங்களை என்ன செய்யலாம்? "என கமல் மந்திர புன்னகையோடு கேட்க இந்த ப்ரோமோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

குறும்படம் பார்சல்
இந்த வாரம் நடைபெற்ற நீதிமன்ற டாஸ்க்கில் இதற்கு முந்தைய வாரம் நடைபெற்ற அரசவை டாஸ்க்கில் நடந்தவைகளை குறித்து தான் இங்கே விவாதங்கள் நடந்து வந்தது. அந்த வரிசையில் விக்ரமன் தன்னுடைய தமிழை குறை கூறிக் விட்டார் என்று ஜனனி விக்ரமன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். நீதிமன்றத்தில் அவருடைய தரப்பு நியாயங்களை விசாரித்து கடைசியில் விக்ரமன் குற்றமற்றவர் என்று தீர்ப்பினை வழங்கி விட்டனர். ஆனால் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பதை ரசிகர்கள் பலரும் குறும்படம் வெளியிட்டு விட்டனர். விக்ரமன் அதில் தெளிவாக உங்களுக்கு செந்தமிழ் பேசுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என கேட்க ஆனால் அதை உங்களுக்கு தமிழ் பேசுவதில் தவறு இருக்கிறதா? என்று என்னை பார்த்து பேசி விட்டார் என்று ஜனனிக்குரிய வார்த்தையை வைத்து இன்று குறும்படம் இருக்கிறது என்பதை கமலுடைய அசத்தலான அதிரடி பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடு அந்த அளவிற்கு சுவாரசியம் இல்லாமல் இழுபறியாக சென்று கொண்டிருந்த நிலையில் இன்றைய எபிசோட் சுவாரஸ்யம் மிக்கதாக இருந்தால் நல்லது தான் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

அப்படி நடந்தால் நல்லது தான்
நீதிமன்ற டாஸ்க் என்றாலே விறுவிறுப்பான வகையில் ஒவ்வொரு வாதங்களும் இருக்கும். குறிப்பாக பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரியின் உண்மையான கேரக்டரை இந்த நீதிமன்ற டாக்கில் தான் பலரும் புரிந்து கொள்ள முடிந்தது.ஆனால் இந்த சீசன் 6 டாக்ஸ்கில் அந்த அளவிற்கு நீதிமன்ற டாஸ்க் எடுப்படவில்லை என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. நீதிமன்ற டாஸ்கிலும் காமெடி பண்ணிக்கொண்டு நீதிபதியே சிரித்துக் கொண்டு இருக்கின்றனர். பலர் ஏதோ கடமைக்கு என்டர்டைன்மென்ட் பண்ணுவோம் என்கிற பெயரில் பொதுநல வழக்கு தொடுத்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இது அந்த அளவிற்கு சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லையே என்று பலர் கருத்து கூறி வந்தாலும் இன்றைய எபிசோடு இந்த மொத்த வாரத்தில் குறையை தீர்த்து விட்டால் நன்றாக இருக்கும். ப்ரோமோவில் மட்டும் டெரராக கமல் பேசிவிட்டு உள்ளே மலுப்பலாக பேசாமல் கடந்த வாரம் நடந்தது போல முகத்துக்கு நேராக போட்டியாளர்களின் குற்றங்களை குறைகளை கூறிவிட்டால் நல்லா இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
