இனி எனக்கு இது தேவையில்லை.. பாதியிலே விட்டுக் கொடுத்து வெளியேறிய அசீம்.. வேஸ்டா போச்சி!
சென்னை; பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 85 ஆவது நாளில் இந்த வார போட்டிக்கான தலைவர் போட்டி நடைபெறுகிறது.
இந்த வாரம் தலைவர் போட்டிக்காக ஏடிகே மற்றும் அசீம் இருவரும் போட்டியிடுகின்றனர்.
தன்னுடைய கோபத்தை வைத்து டார்கெட் செய்த ஏடிகேவிற்கு இந்த வார தலைவர் பதவியை கடைசியில் அசீம் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

அசீமின் புதிய உறுதிமொழி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பன்னிரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்த வாரத்தில் தலைவர் பதவிக்கான போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு கடந்த வாரம் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் மற்றும் ஏடிகே இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அசீம் இந்த வாரத்தில் இனி தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்வேன் என்று நேற்றைய எபிசோடில் கமல் முன்னிலையில் இந்த வருடத்திற்கான புதிய உறுதிமொழி எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று தன்னுடைய விளையாட்டை தொடங்கி இருக்கிறார்.

இந்த வார தலைவர்
21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் இப்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். எந்த நிலையில் இந்த வாரத்தின் தலைவராக ஏ டி கே பொறுப்பு ஏற்று இருக்கிறார். இந்த வாரத்தில் தலைவர் பதவிக்காக யாருக்கு தகுதி இருக்கிறது என்பது இந்த வாரம் ஏடிகே மற்றும் அசீம் இருவரும் காரசாரமாக ஒருவரை மாற்றி ஒருவர் கருத்து கூறிக் கொண்டிருக்கின்றனர். இதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கோபக்காரன் என்கிற முத்திரை
பின்பு ஏடிகே உங்களை விட எனக்கு அதிகமாக ஃபேஷன்ஸ் அதிகம் என்று நினைக்கிறேன். உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று நான் நினைக்கிறேன் என பேசுகிறார். அதற்கு அசீம் கேப்டன் ஆகுறதுக்காக தான் நான் கோபப்படுகிறேன். ஏடிகே நீங்க பேசுறது எனக்கு கோபக்காரன் என்கிற முத்திரை குத்துறது போல இருக்குது. கோவக்காரன் என்கிற பெயர் வாங்கினாலும் எனக்கு பரவாயில்லை. நல்லது தான். அதனால் நீங்கள் இந்த வார கேப்டன் என்று ஏடிகேவுக்கு அசீம் கை கொடுக்கிறார். இதை பார்த்து உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குழப்பம் அடைய ரச்சிதா அதிர்ச்சியாகிறார்.

இதை நம்ப முடியலையே
அசீம் இப்படி மாறியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. டாஸ்க் நேரத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அசீம் கத்தி கூட்பாடு போடுவார் அல்லது ஏடிகே மீது பல்வேறு குற்ற சாட்டுகளை சுமத்துவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏடிகேயும் டாஸ்க் நேரத்தில் பலமுறை கோபப்பட்டு இருந்தாலும் தற்போதைய தலைவர் பதவிக்கான டாஸ்க்கின் அமைதியாகவே பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் நேற்று கமல் கொடுத்த அட்வைஸ் இன்று எப்படி மாறிவிட்டதே என்று ஆச்சரியம் பட்டு வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications